×
 

#Breaking தமிழகத்தையே உலுக்கிய சம்பவம்... தொடர்ந்து உயரும் பலி எண்ணிக்கை....!

திருவள்ளூர் மாவட்டம், பெரியப்பாளையம் அருகே உள்ள இறால் பதப்படுத்தும் ஆலையில் ஏற்பட்ட அம்மோனியா வாயு கசிவு விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை தாலுகாவில் உள்ள கன்னிகைப்பேர் பகுதியில் செயின்ட் பீட்டர் அண்ட் பால் என்ற பெயரில் கடல் உணவு பதப்படுத்தும் ஆலை செயல்பட்டு வந்தது.கடந்த ஞாயிறுன்று (ஜூன் 21) ஆலையில் பனிக்கட்டி தயாரிக்கும் இயந்திரத்துக்கு செல்லும் பாதையில் அமோனியா வாயு கசிவு ஏற்பட்டது.

இந்தச் சம்பவத்தில் சுமார் எண்பதுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். அவர்கள் அருகில் இருந்த தனியார் மருத்துவமனையிலும் சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இதில் இன்று காலை நிலவரப்படி 15 பேர் உயிரிழந்த நிலையில், அம்மோனியா வாயு கசிவு விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது. இந்த விபத்தில் பாதிக்கப்பட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 18 வயதான கபிதா ஜுங்கா உயிரிழந்தார்.

இதையும் படிங்க: 300 மீட்டருக்குள் மக்கள் நுழைய தடை... அமோனியா வாயு கசிவு குறித்து மாவட்ட ஆட்சியர் அதிர்ச்சி தகவல்...!

ஏற்கனவே சிகிச்சை பெற்று வந்த மற்றொரு இளம்பெண்ணும் உயிரிழந்த நிலையில், தற்போது கபிதா ஜுங்காவின் உயிரிழப்பால் அம்மோனியா வாயு கசிவு விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.

இதையும் படிங்க: பின்விளைவு பயங்கரமா இருக்கும்..! புது நடுவர் மன்றம்... எச்சரிக்கும் கே. சி. பழனிசாமி..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share