×
 

டெல்லி குண்டுவெடிப்பு எதிரொலி; திருச்செந்தூர் முருகன் கோயிலில் போலீஸ் குவிப்பு...!

டெல்லியில் கார் வெடிப்பு எதிரொலி. திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை.

டெல்லியில் கார் வெடிப்பு எதிரொலி. திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை. 100 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

டெல்லி செங்கோட்டையில். நேற்று மாலையில் கார் வெடித்து பத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் போலீசார் சோதனைகளை தீவிரப்படுத்தி உள்ளனர். 

அந்த வகையில் முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக கருதப்படும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று காலை முதலே போலீசார் மற்றும் வெடிகுண்டு சோதனை செய்யும் நிபுணர்கள் பக்தர்கள் வைத்திருக்கும் பைகளில் திறந்து வெடிகுண்டு சோதனை செய்யும் கருவி மூலம் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

இதையும் படிங்க: டெல்லி கார் குண்டுவெடிப்பு: ஒருவர் உடல் சிதறி பலி... உயிரிழப்பு எண்ணிக்கை கிடுகிடுவன உயரும் அபாயம்...!

இதில் திருச்செந்தூர் டிஎஸ்பி சுரேஷ்குமார் கோவில் காவல் ஆய்வாளர் கனகராஜ் மற்றும் போலீசார் இந்த சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக கோவில் முன்புள்ள கடற்கரை பகுதி கடற்கரை பகுதியில் சிறு வியாபாரிகள் வைத்துள்ள கடைப்பகுதிகள் கோவில் வளாகத்தில் பக்தர்கள் தங்கி உள்ள இடங்களில் அவர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும் திருச்செந்தூர் கோயிலை சுற்றி 100 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

அதேபோல் குலசேகரன்பட்டினம் இஸ்ரோ வளாகத்திற்குள் செல்லும் வாகனங்கள், உடன்குடி அனல்மின் நிலைய வளாகத்திற்குள் செல்லும் வாகனங்கள், பழையகாயல் செர்கோனியம் வளாகத்திற்குள் செல்லும் வாகனங்கள் என அனைத்தும் சொன்னதற்கு பிறகே அனுமதிக்கப்படுகிறது.

மேலும் தூத்துக்குடி திருச்செந்தூர் பிரதான சாலையில் உள்ள அனைத்து முக்கிய பகுதிகளிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

இதையும் படிங்க: #BREAKING நாடே பேரதிர்ச்சி... செங்கோட்டை அருகே மிகப்பெரிய குண்டுவெடிப்பு...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share