இன்று முதல் இதற்கு தடை... திருச்செந்தூர் கோயில் நிர்வாகம் அதிரடி அறிவிப்பு...!
கடற்கரைப் பகுதியில் பக்தர்கள் இரவு பாதுகாப்பு கருதி தங்குவதற்கு அனுமதி இல்லை.
திருச்செந்தூர் முருகன் கோவிலில் பாதுகாப்பு நடவடிக்கை- கடற்கரைப் பகுதியில் பக்தர்கள் இரவு பாதுகாப்பு கருதி தங்குவதற்கு அனுமதி இல்லை.
திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகிறார்கள். பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பதினால் தரிசனம் செய்ய முடியாத பட்சத்தில் முருகனை தரிசிப்பதற்காக கோவில் கடற்கரை பகுதியில் இரவு தங்குவது வழக்கமாக இருந்தது.
சமீப காலமாக திருட்டு மற்றும் பொருட்கள் காணாமற்போவது போன்ற சம்பவங்கள் அதிகரித்ததையடுத்து, பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், கோவில் நிர்வாகம் இன்று முதல் புதிய அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.
இதையும் படிங்க: வெற்றி வேலனுக்கு அரோகரா... விண்ணை பிளந்த கோஷம்... சூரனை சம்ஹாரம் செய்த ஜெயந்திநாதர்...!
இதன் படி, இனிமேல் கடற்கரை பகுதியில் யாரும் இரவு நேரங்களில் தங்க அனுமதி இல்லை என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அதன்படி இன்று முதல் திருக்கோவில் கடற்கரை பகுதியில் தரிசனத்திற்காக குடும்பத்துடன் தங்கி இருக்கும் பக்தர்களை திருக்கோவில் பணியாளர்கள், காவல்துறையினர்கள் கடலோர பாதுகாப்பு குழுவினர்கள் ஆகியோர், தங்கியிருக்கும் பக்தர்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பக்தர்கள் யாரும் இன்று முதல் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை திருக்கோவில் கடற்கரையில் தங்க அனுமதி இல்லை என ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தப்பட்டு வருகின்றது. அதன்படி திருக்கோவில் முன்புள்ள கடற்கரை பகுதியில் இருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள அய்யா கோவில் வரை உள்ள கடற்கரை பகுதியில் பக்தர்கள் யாரும் இல்லாதவாறு கடலோர பாதுகாப்பு குழுவினர்கள், காவல்துறை, மற்றும் கோவில் பணியாளர்கள் ஆகியோர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு பக்தர்களுக்கு அறிவுரை வழங்கி கோவில் வளாகங்களில் மற்றும் அங்குள்ள மண்டபங்களில் தங்கிக் கொள்ளுமாறும் கூறி அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர்.
இதனால் தற்பொழுது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கடற்கரையானது ஆள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இந்த 5 நாட்கள் பக்தர்கள் சதுரகிரிக்கு செல்ல தடை..!! காரணம் இதுதான்..!!