திருப்பதி செல்வோர் கவனத்திற்கு... தேவஸ்தானம் வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு...!
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜூன் மாத தரிசன ஒதுக்கீட்டு ஒதுக்கீடு
தி ருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜூன் மாதத்திற்காக பல்வேறு தரிசனம் மற்றும் அறை ஒதுக்கீடு குறித்து தேவஸ்தானம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி (சுப்ரபாதம், தோல்மாலை , அர்ச்சனை, அஷ்டதல பாத பத்மாராதன சேவை) ஜுன் மாதத்திற்கு மார்ச் 18 ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடும். இந்த சேவை டிக்கெட்டுகளுக்காக மார்ச் 20 ஆம் தேதி காலை 10 மணிக்கு வரை மின்னணு டிப் குலுக்கலுக்கு ஆன்லைனில் பதிவு செய்யலாம். பதிவு செய்தவர்களுக்கு குலுக்கலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மார்ச் 20 முதல் 22 வரை மதியம் 12 மணிக்குள் பணம் செலுத்தி டிக்கெட்டுகள் பெறலாம்.
கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, அர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ரதீபாலங்கார சேவை மற்றும் ஜேஷ்டாபிஷேகம் டிக்கெட்டுகளை 21 ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடும். இதே சேவைக்கு நேரடியாக பங்கேற்காமல் நேரடியாக சாமி தரிசனத்திற்கு மட்டும் செல்லும் விர்சூவல் சேவைக்கு 21 ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடும்.
அங்க பிரதட்சனம் செய்வதற்கான இலவச டோக்கன்கள் 23 ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும். ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு ரூ 10 ஆயிரம் நன்கொடை செலுத்தி செல்லும் வி.ஐ.பி. தரிசன டிக்கெட்டுகளுக்காக 23 ஆம் தேதி காலை 11 மணிக்கு வெளியிடப்படும்.
இதையும் படிங்க: தேர்தல் ஆணையம் அதிரடி! கரூர், ஈரோடு உட்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் அதிரடி மாற்றம்!
முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நாள்பட்ட நோய்கள் உள்ளவர்களுக்கான இலவச சிறப்பு தரிசன டோக்கன்கள் 23 ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடும். ரூ.300 கட்டண சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் 24 ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடும்.
திருமலை மற்றும் திருப்பதியில் அறைகள் பெற 24 ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும். அனைத்து சாமி தரிசன டிக்கெட்டுகள் மற்றும் அறைகள் பெற தேவஸ்தானத்தின் அதிகாரபூர்வ https://ttdevasthanams.ap.gov.in என்ற இணையதளம் மூலம் மட்டுமே முன்பதிவு செய்யுமாறு தேவஸ்தான வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: டெல்லியில் 8 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை... சிறுவர்கள் வெறிச் செயல்..!