×
 

திருப்பதி சென்ற பக்தர்களுக்கு நேர்ந்த பரிதாபம்... கார் மீது லாரி மோதி 5 பேர் துடிதுடித்து பலி...!

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சாமி தரிசனம் சென்ற பெங்களூரு பக்தர்கள் கார் மீது லாரி மோதிய விபத்தில் 5 பேர் பலி

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த பெங்களூரை சேர்ந்த பக்தர்கள் கார் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்ட லாரி மீது மோதியதில் 5 பேர் பலி 

கர்நாடக மாநிலம் பெங்களூர் ராஜாஜி நகரை சேர்ந்த நாகராஜ ராவ் குடும்பத்தினர் காரில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக காரில் இன்று காலை புறபட்டு வந்து கொண்டுருந்தனர். கார் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பலமனேர்  தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுருந்த லாரியின் பின்னாள் சென்று  கார்  மோதியது. இதில்  மோகன்தாஸ் (71) , நாகராஜா ராவ் (  61 ), குசுமா (61 ), ஜெயந்தி (59 ), பூஜா ( 33 ) ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

தகவல் அறிந்து வந்த போலீசார் காரில் சிக்கி இறந்தவர்கள் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: திருப்பதி செல்லும் பக்தர்களே உஷார்... தேவஸ்தானம் வெளியிட்ட அதி முக்கிய எச்சரிக்கை...!

இதையும் படிங்க: கொட்டமும், ஆணவமும் கூடி போச்சு... சுயமரியாதையை சீண்டிப் பார்த்தா அவ்ளோதான்... முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share