"90% பாமாயில் கலப்படம்"... திருப்பதி நெய் சர்ச்சையில் உ.பி. நிறுவனத்தின் சதி அம்பலம்...!
நீதிமன்றம் இந்த மாதம் 21 ஆம் தேதி வரை அவருக்கு நீதிமன்ற காவலுக்கு உத்தரவிட்டதால் நெல்லூர் சிறையில் அடைக்கப்பட்டது.
திருமலை ஏழுமலையான் கோயிலுக்கு கலப்பட நெய் விநியோகம் செய்த வழக்கில் நெய் என இரசாயனம் சப்ளை செய்தவரை கைது செய்த போலீசார்
நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு லட்டு பிரசாதம் தயார் செய்ய பயன்படுத்தப்பட்ட நெய்யில் கலப்பட செய்த வழக்கில் மேலும் ஒருவரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்தனர். சிபிஐ சிறப்பு விசாரணை குழு ஏ16 அஜய் குமார் சுகந்தை கைது செய்தனர். கலப்பட நெய்யிற்காக மோன் கிரீஸ்ராய்ட்ஸ் மற்றும் அசிட்டிக் ஆசிட் ஆஸ்டர் போன்ற ரசாயனங்களை போலே பாபா நிறுவனத்திற்கு அஜய் குமார் வழங்கி வந்துள்ளார்.
லட்டு தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட இவர்கள் சப்ளை செய்த நெய்யில் 90 சதவீதத்திற்கும் அதிகமானவை பாமாயில் என்று எஸ்.ஐ.டி அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். மோன் கிரீஸ்ராய்ட்ஸ் மற்றும் அசிட்டிக் ஆசிட் ஆஸ்டர் போன்ற ரசாயனங்களை பாமாயில் தயாரிக்க அஜய் குமார் பயன்படுத்தி வந்துள்ளார். பாமாயில் தயாரிக்க அஜய் குமார் கடந்த ஏழு ஆண்டுகளாக போலே பாபாவுக்கு டெய்ரி நிறுவனத்திற்கு இந்த ரசாயனங்களை சப்ளை செய்து வந்துள்ளார்.
இதையும் படிங்க: #BREAKING இபிஎஸ் அற்பத்தனம் அம்பலமானது... ராமதாஸ், நயினாருக்கும் சவுக்கடி பதிலடி கொடுத்த ஆர்.எஸ்.பாரதி...!
சி.பி.ஐ. அதிகாரிகள் நெல்லூர் ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் அஜய் குமார் சுகந்தை ஆஜர்படுத்தினர். நீதிமன்றம் இந்த மாதம் 21 ஆம் தேதி வரை அவருக்கு நீதிமன்ற காவலுக்கு உத்தரவிட்டதால் நெல்லூர் சிறையில் அடைக்கப்பட்டது.
ஏற்கனவே இந்த வழக்கில் திண்டுக்கல் ஏ.ஆர். டெய்ரியின் நிர்வாக இயக்குநர் ராஜு ராஜசேகரன், போலே பாபா டெய்ரியின் முன்னாள் இயக்குநர்கள் பிபின் ஜெயின் மற்றும் பொமில் ஜெயின், வைஷ்ணவி டெய்ரியின் சி.இ.ஓ. அபூர்வா வினய் காந்த் சாவ்டா, முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டியின் உதவியாளர் சின்ன அப்பன்னா உள்ளிட்டோரை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் மேலும் பலர் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: பகீர் சம்பவம்...!! பட்டப்பகலில் இளைஞர் சுட்டுக்கொலை.. பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்...!