×
 

ஷாக்...! திடீரென உடைந்த ஏரி... வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 2000 உயிர்கள்...!

திருப்பதி மாவட்டத்தில் அதிகாலையில் ஏரிக்கரையில் ஏற்பட்ட உடைப்பு 500 மேற்பட்ட வீடுகளை சூழ்ந்த வெள்ள நீர்; 2000 த்திற்கும் மேற்பட்ட கால்நடைகள், வாகனங்கள் நீரில் அடித்து செல்லப்பட்டது

மோந்த புயல் காரணமாக பெய்த கனமழையால் திருப்பதி மாவட்டம் கே.வி.பி.புரம் மண்டலம் பழைய கால்வாய் ராயல செருவு ( ஏரியில் ) பெரும் வெள்ள நீர் தொடர்ந்து வந்து சேர்ந்தது. இந்தநிலையில் ஏரியின் நீர்மட்டம் ஆபத்தான அளவை எட்டிய நிலையில் மழை திடீரென குறைந்ததால் அதிகாரிகளும் அப்பகுதி மக்களும் நிம்மதிப் அடைந்தனர். இந்தநிலையில் இன்று அதிகாலையில் என்ன நடந்தது என்பதை அறிவதற்குள் ஏரியின் கரை உடைந்து ஏரியில் இருந்த நீர் முற்றிலும் தாழ்வான பகுதிகளுக்குள் சென்றது. இதமால் ஒல்லூர், பாத்தபாலம் ராஜுலா கண்ட்ரிகா, களத்தூர், மற்றும் ஆகிய கிராமங்கள் வெள்ளத்தில் முற்றிலுமாக நிறைந்தன. கிராமத்தில் 500 க்கும் மேற்பட்ட வீடுகளில் சூழ்ந்து கொண்ட வெள்ள நீர் வீதிகளில் ஆறு  போல் ஓடியதால் வீடுகள் முன்பு கட்டப்பட்டிருந்த பசு, எருமை மாடுகள், ஆடுகள் என 2000 கால்நடைகள் அடித்து செல்லப்பட்டன.

இதேபோல், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஆட்டோக்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இருப்பினும், வெள்ளத்தில் மூழ்கிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்கள் வீடுகளின் மொட்டை மாடிகளில் ஏறி தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொண்டனர். இந்த வெள்ளத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்களை மூழ்கடித்தது. ராகிகுண்டா ஸ்ரீகாளஹஸ்தி - பிச்சாத்தூர் சாலை துண்டிக்கப்பட்டதால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. வயல்களில் சேறு மற்றும் மணல் திட்டுகளும் உருவாகின. அடாவரம் மற்றும் களங்கி கிராமங்கள் வழியாக களங்கி நீர்த்தேக்கத்தை அணைக்கு சேர்ந்தது.

நீர்மட்டம் அதன் கொள்ளளவை மீறியதால், அதிகாரிகள் களங்கி மதகுகளை திறந்ததன் விளைவாக, களங்கி அணைக்கு தாழ்வான பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கின. வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கால்நடைகள் இறந்து கிடப்பதைக் கண்டதாக கிராம மக்கள் தெரிவித்தனர். 

இதையும் படிங்க: குற்றாலத்தில் 8வது நாளாக தொடரும் தடை..!! ஆனா ஐந்தருவியில் மட்டும் குளிக்கலாம்..!!

தகவல் கிடைத்தவுடன் புத்தூர் டிஎஸ்பி ரவிக்குமார், கேவிபி புரம், சத்தியவேடு மற்றும் பிச்சாட்டூர் காவல் நிலையங்களின் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிராம மக்களுக்கு தேவையான உதவிகளுடன் நிவாரணப் பணிகளை தீவிரப்படுத்தினர்.

மாவட்ட எஸ்பி சுப்பராயுடு சம்பவ இடத்திற்கு வந்து நிலைமையை நேரில் ஆய்வு செய்து கிராம மக்களிடம் பேசி விவரங்களை கேட்டறிந்தார். ஏரியின் நீர் மட்டத்தை மற்றங்களை மாற்றங்களை உன்னிப்பாகக் கண்காணித்து, தேவைப்பட்டால் கிராம மக்களை உடனடியாக பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்ற போலீசாருக்கி எஸ்பி அறிவுறுத்தினார். நிவாரண நடவடிக்கைகளில் எந்த தாமதமும் இல்லாமல் மக்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று அவர் உத்தரவிட்டார்.

இதுகுறித்து மாவட்ட எஸ்பி சுப்பாராயுடு வெளியிட்டுள்ள அறிக்கையில் ஏரிக்கரை உடைந்த "சம்பவத்திற்குப் பிறகு உடனடியாக போலீசார் மற்றும் கிராம மக்களை ஒருங்கிணைத்ததால் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை. சுமார் 500 வீடுகள் நீரில் மூழ்கியிருந்தாலும், சரியான நேரத்தில் நடவடிக்கை எடுத்து மக்களை பாதுகாப்பாக வெளியேற்ற முடிந்தது. கால்நடைகள் இழந்த இடங்களில் உடனடி நிவாரண நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தற்போது, ​​மாவட்ட ஆட்சியரின் தலைமையில், அனைத்து துறைகளும் மறுவாழ்வு நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து வருகின்றன என்று அவர் கூறினார்.

இதையும் படிங்க: கும்பக்கரை அருவியில் ஆர்ப்பரிக்கும் வெள்ளம்..!! 12 நாள் ஆச்சு.. ஆனாலும் குளிக்க தடை..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share