×
 

உதயநிதி ஸ்டாலின் கேட்ட ஒற்றை கேள்வி... அதிரி புதிரியான சட்டப்பேரவை... சபாநாயகர் கொடுத்த வார்னிங்...!

முதலமைச்சர் பேசிய பேச்சைத்தான் இங்கே நான் அவைக்குறிப்பில் குறிப்பிட விரும்புகிறேன். அதை நீக்க மாட்டீர்கள் என்று நான் நம்புகிறேன்.

மேகதாது அணை விவகாரம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்திருந்தார். அதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் பேச ஆரம்பித்ததுமே தவெகவினர் சத்தம் போட்டதால் சலசலப்பு நிலவியது. சபாநாயகரும் தீர்மானம் குறித்து மட்டுமே பேசும்படி அறிவுறுத்தினார். இதுகுறித்து விரிவாக பார்க்கலாம். 

உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: “முதலமைச்சர் பேசிய பேச்சைத்தான் இங்கே நான் அவைக்குறிப்பில் குறிப்பிட விரும்புகிறேன். அதை நீக்க மாட்டீர்கள் என்று நான் நம்புகிறேன்.”

“ஸ்டாலின் அவர்கள் அப்பப்போ எழுந்து கடிதம் எழுதிவிட்டு தூங்கப் போய்விடுவார். அவ்வளவுதான். அது அப்படியே கிடக்கும். ‘மானே, தேனே, பொன்மானே’ என்று இப்படி கடிதம் எழுதுவதெல்லாம் இனிமேல் வேலைக்கு ஆகாது” என்று அவர் கூறினார்.

இதையும் படிங்க: தவெக செய்தித் தொடர்பாளர் பெலிக்ஸ் ஜெரால்டுக்கு முக்கிய பதவி! சிறுபான்மையினர் ஆணைய தலைவராக நியமனம்

அப்போது குறுக்கிட்ட சபாநாயகர், “நான் ஏற்கனவே சொல்லிவிட்டேன். நீங்கள் பேசியதை அவையிலிருந்து நீக்க வேண்டிய நிலை வரும். நீங்கள் கொடுத்திருக்கிற விதிப்படிதான் பேச வேண்டும். நீங்கள் கொடுத்திருக்கிற சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்தை எடுத்துக்கொண்டிருக்கிறேன். நீங்கள் கொடுத்திருக்கும் தீர்மானத்தின்படிதான் பேச வேண்டும்.

மற்ற விஷயங்களைப் பேசுவதற்கு உங்களுக்கு மானியக் கோரிக்கைகள் வருகின்றன. மற்ற சமயங்களில் அவற்றைப் பேசலாம். இப்போது அதை அனுமதிக்க இயலாது. கவன ஈர்ப்புத் தீர்மானத்தில் விதிகளின்படி எந்தப் பொருள் குறித்து நீங்கள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்திருக்கிறீர்களோ, அந்தப் பொருள் குறித்து மட்டும்தான் பேச வேண்டும். மீதி விஷயங்களைப் பேசுவதற்கு நான் அனுமதிக்க மாட்டேன்.

தேவையற்ற சர்ச்சையை உருவாக்காமல், எதை நோக்கிச் செல்ல வேண்டும் என்று இந்தத் தமிழ்நாடு விரும்புகிறதோ, அதை நோக்கி மட்டும் செல்லுங்கள். இங்கு வந்து இது ஒரு பெரிய அரசியல் பிரச்சினை, உரிமைப் பிரச்சினை என்று பேச வேண்டாம்.”

“முன்னாள் முதலமைச்சருக்கும் தெரியும். இந்த ஜீவாதாரப் பிரச்சினையை எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்து மாநில அரசுக்கும் தெரியும். இங்கே என் முன்னால் இருப்பது, விதிகளின்படி இந்தப் பேரவையை நடத்த வேண்டும் என்பதுதான்.

விதிகளுக்கு உட்பட்டு, அவர் அவசியம் என்று கருதிய இந்தப் பிரச்சினையை எடுத்திருக்கிறேன். அவர் கொடுத்திருக்கிற இந்தக் கவன ஈர்ப்புத் தீர்மானத்தில் என்ன குறிப்பிட்டிருக்கிறாரோ, அந்தக் கருத்துக்களை மட்டும் பேச வேண்டும்.

சாதாரணமாக மரபு என்னவென்றால், தீர்மானத்தைப் படித்துவிட்டு, ‘இந்தப் பிரச்சினையை உங்கள் கவனத்திற்கு கொண்டு வந்து, கவனத்தை ஈர்க்கிறேன்’ என்று சொல்லிவிட்டு அமர்வதுதான் சரி.

ஆனால், இந்தப் பிரச்சினையின் தீவிரம் கருதி நான் அவரைப் பேச அனுமதித்திருக்கிறேன். மேற்கொண்டு இந்தப் பிரச்சினையை அரசியல் நோக்கத்தில் கொண்டு செல்லாமல், இதில் நீங்கள் குறிப்பிட்டுள்ள பிரச்சினையைப் பற்றி மட்டும் பேசிவிட்டு அமருமாறு கேட்டுக்கொள்கிறேன்.”  என்றார். 

தொடர்ந்து பேசிய உதயநிதி ஸ்டாலின், “பேரவைத் தலைவரே, இந்தப் பிரச்சினை தீவிரமான பிரச்சினை என்று நீங்களே சொல்கிறீர்கள். நான் கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். நாங்கள் தொடர்ந்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

காவிரியில் இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக கர்நாடக அரசு தொடர்ந்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி வருகிறது. அங்கு இருக்கக்கூடிய அனைவருடைய கருத்துகளையும் கேட்கிறார்கள். ன் தமிழக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுவதைத் தவிர்க்கிறது என்பதுதான் எங்களுடைய கேள்வி.

அதாவது, பேரவைத் தலைவர் வாயிலாக இன்னும் ஒன்றைத் தெரிவிக்க விரும்புகிறேன். இந்த அரசு ஒரு புதிய டெக்னிக்கை தொடர்ந்து பின்பற்றி வருகிறது. எதையாவது செய்வதற்கு முன்னதாக அந்தச் செய்தியை இவர்களே லீக் செய்கிறார்கள். உடனடியாக அதற்கு எதிர்ப்பு பலமாக இருந்தால், உடனே...” 

இதனையடுத்து அவையில் தவெகவினரும், திமுகவினரும் கூச்சலிட்டதால் பரபரப்பு நிலவியது. 

“ஒரு நிமிடம். தேவையற்ற பிரச்சினையைத் திருப்ப வேண்டாம். நான் சொல்லுகிறேன். இந்தப் பிரச்சினையை ஒட்டி மட்டும் பேசுங்கள். எந்த ஸ்ட்ராடஜியும் என் முன்னால் இருக்கின்ற பிரச்சினைக்குத் தேவையில்லை” எனக்கூறி சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அவையை அமைதிப்படுத்தினார். 

இதையும் படிங்க: தமிழகமே கொந்தளிக்குது.. வாயை திறந்து பேசுங்க விஜய்... வெளுத்து வாங்கிய ஆர்.பி.உதயகுமார்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share