கர்நாடக புதிய முதல்வர் டி.கே.சிவகுமாருக்கு தமிழக முதலமைச்சர் விஜய் மனமார்ந்த வாழ்த்து!
கர்நாடக மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள டி.கே.சிவக்குமாருக்குத் தமிழக முதலமைச்சர் விஜய் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டி.கே. சிவகுமார் அவர்களுக்குத் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
தென்னிந்திய அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த கர்நாடக மாநில ஆட்சி மாற்ற நடைமுறைகளின் ஒரு பகுதியாக, அம்மாநிலத்தின் புதிய முதலமைச்சராகத் டி.கே. சிவகுமார் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, நாளை முறைப்படி பதவியேற்க உள்ளார். இந்தச் சூழலில், அண்டை மாநிலமான தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய் அவர்கள், டி.கே. சிவகுமாருக்கு வாழ்த்துத் தெரிவித்துத் தனது அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கத்தில் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள அந்த வாழ்த்துச் செய்தியில், கர்நாடக மாநிலத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள திரு.டி.கே. சிவகுமார் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். I convey my heartfelt congratulations to Thiru. D.K. Shivakumar on assuming office as the new Chief Minister of Karnataka" என்று தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் மிகக் கண்ணியமாகத் தனது வாழ்த்துக்களைப் பதிவு செய்துள்ளார்.
இதையும் படிங்க: கிரீன் சிக்னல் காட்டிய ஆளுநர்..!! ஆட்சி அமைக்க விஜய்க்கு அழைப்பு.. 13ம் தேதிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவு..!!
அண்மையில் தவெக-வின் டெல்லி பயணம் மற்றும் காவிரி மேகதாது அணை விவகாரம் தொடர்பாகத் திமுக மற்றும் தவெக இடையே அரசியல் வார்த்தைப் போர்கள் அனல் பறந்து வரும் வேளையில், புதிய கர்நாடக முதலமைச்சருக்குத் தமிழக முதல்வர் விஜய் விடுத்துள்ள இந்த வாழ்த்துச் செய்தி இரு மாநில அரசு உறவுகளின் அடுத்தகட்ட நகர்வாகப் பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: நாளை பதவியேற்பு விழா..!! விஜய்யுடன் பதவி ஏற்கப்போகும் அந்த 9 அமைச்சர்கள் யார் யார்..??