தமிழகமே பரபரப்பு... விஜயின் கரூர் பிளான்... நாளை விடிந்ததுமே காத்திருக்கும் மெகா ட்விஸ்ட்...!
பல்வேறு அரசுத் துறைகளில் பணியாற்றுவதற்காக 32 பேருக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணைகளையும் முதலமைச்சர் வழங்க உள்ளார்.
கடந்த ஆண்டு கரூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். மேலும், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை 40 நாட்களுக்குள் சென்னைக்கு வரவழைத்து, அப்போதைய தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நேரில் சந்தித்திருந்தார்.
கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு கேள்விகள் தமிழக வெற்றிக் கழகத்தை நோக்கி எழுப்பப்பட்டன. மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரிக்கையும் எழுந்த நிலையில், விஜய் இதுவரை சம்பவ இடத்திற்கு நேரில் செல்லவில்லை என்ற குற்றச்சாட்டும் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வந்தது.
தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்த பிறகு இந்தப் பயணத்தை மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தாலும், சட்டப்பேரவை கூட்டத்தொடர், ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம், துறை சார்ந்த ஆலோசனைக் கூட்டங்கள் உள்ளிட்ட தொடர் அரசு பணிகள் காரணமாக பயணம் தள்ளிப்போனதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: முதலமைச்சர் ஆன பிறகு முதல் முறை... கரூர் செல்கிறார் ஜோசப் விஜய்... எப்போது தெரியுமா?
இந்தச் சூழலில், தமிழ்நாடு முதலமைச்சரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான ஜோசப் விஜய், கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை அவர்களது சொந்த ஊரிலேயே நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க திட்டமிட்டுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் நாளை கரூர் மாவட்டத்திற்கு செல்லவுள்ளார்.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் அரசு விழாவில், கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் மனவாசி ஊராட்சியில் ரூ.1,700 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ள Evervan Kothari Footwear Private Limited நிறுவனத்தின் புதிய காலணி உற்பத்தி தொழிற்சாலைக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டுகிறார்.
இந்த தொழிற்சாலையின் மூலம் சுமார் 13,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு அரசுத் துறைகளில் பணியாற்றுவதற்காக 32 பேருக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணைகளையும் முதலமைச்சர் வழங்க உள்ளார்.
இதையும் படிங்க: திரும்பி திசையெல்லாம் அலறல் சத்தம்.... குவைத், பஹ்ரைன், கத்தார் மீது ஈரான் கொடூர தாக்குதல்... பற்றி எரியும் மத்திய கிழக்கு...!