#BREAKING தமிழகமே எதிர்பார்த்த சட்டமன்ற தேர்தல்... தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு...!
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான ஆயத்த பணிகளை தொடங்கியது தேர்தல் ஆணயம்.
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான ஆயத்த பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. தமிழகத்திற்கான சட்டப்பேரவை தேர்தலை பொறுத்தவரை அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நடைபெற இருக்கின்றது. இந்நிலையில் சட்டப்பேரவை தேர்தலுக்கான ஆயத்த பணிகளை முழு அளவிலே தேர்தல் ஆணையம் தொடங்கி இருக்கின்றது. அதன்படி தமிழகத்தில் இருக்கக்கூடிய 234 சட்டப்பேரவை தொகுதிகளுக்குமான தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன் அடிப்படையிலே 234 தொகுதிகளும் சராசரியாக ஒரு தொகுதிக்கு இரண்டு தேர்தல் அதிகாரிகள், அதேபோல 4 துணை அதிகாரிகள் என மொத்தமாக ஒரு தொகுதிக்கு ஆறு பேர் நியமிகப்பட்டுள்ளார்கள். தொடர்ச்சியாக ஒவ்வொரு தொகுதிக்கும் நுண் பார்வையாளர்கள், தொழில்நுட்ப பார்வையாளர்கள் என அடுத்தடுத்து நியமிக்கப்படுவார்கள். மேலும் அந்தந்த மாவட்ட ஆட்சி தலைவரின் கீழ் இருக்கக்கூடிய தொகுதியில் அந்த மாவட்ட ஆட்சி தலைவர் தான் பொறுப்பாளராக இருப்பார். எனவே அதன் அடிப்படையில் ஒவ்வொரு மாவட்ட ஆட்சி தலைவரும் தேர்தல் அதிகாரியாக அந்த மாவட்டத்திற்கு செயல்படுவார். அவருக்கு கீழாக இந்த 234 தொகுதியினுடைய பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.
எனவே அதன் அடிப்படையில் ஒவ்வொரு மாவட்ட ஆட்சி தலைவர் கீழ் இவர்கள் தங்கள் பணிகளை செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஏற்கனவே இந்திய தேர்தல் ஆணயம் சார்பில் தமிழ்நாட்டு சட்டமன்ற தேர்தலுக்கான பொருட்களை வாங்குவதற்கான டெண்டர் அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் தொடர்ச்சியாக பல்வேறு முன்னெடுப்புகளும் தேர்தலுக்கான பணிகளை தற்போது இந்திய தேர்தல் ஆணையம் இறங்கி இருக்கிறது. ஏற்கனவே தேர்தல் ஆணையம் சிறப்பு தீவிர திருத்த பணிகளை மேற்கொண்டு வருகின்றார்கள். இன்னும் சில நாட்களிலே வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
அந்த பணியில் இறுதி கட்டத்தை எட்டி இருக்கக்கூடிய சூழ்நிலையிலே தேர்தலுக்கான முழு அளவிலான பணிகளை தொடரக்கூடிய விதமாக இந்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கின்றது. சட்டப்பேரவை தொகுதிவாரியாக தேர்தல் நடத்தும் அலுவளர்கள் நியமனம் செய்யப்பட்டு அதற்கான உத்தரவு தற்பொழுது பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: SIR - கால அவகாசம் நீட்டிப்பு..!! தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு..!!
இதையும் படிங்க: அன்புமணி தான் தலைவர்..!! ராமதாஸுக்கு பறந்த கடிதம்..!! அதிரடி காட்டிய தேர்தல் ஆணையம்..!!