வட மாநில தொழிலாளிகள் இளைஞரை கொன்றார்களா? உண்மையை உடைத்த FACT CHECK...!
திண்டுக்கல்லில் இளைஞர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தின் உண்மை நிலையை தமிழக அரசின் தகவல் சரி பார்ப்பகம் தெரிவித்துள்ளது.
திண்டுக்கல் அருகே இளைஞர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் வதந்தி பரப்பப்பட்டு வருவதாக தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது. இளைஞரை வட மாநில தொழிலாளிகள் கொலை செய்து விட்டதாக சமூக வலைதளங்களில் பரப்பப்படும் செய்தி தவறானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் அருகே இளைஞர் கொலையில் காதலி உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாக தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள தும்பல பட்டி என்னும் ஊரில் செயல்பட்டு வந்த தனியார் செங்கல் தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர் 24 வயதான சரவணன்.
இவர் வடமாநில தொழிலாளிகளால் அடித்துக் கொலை செய்யப்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் வதந்தி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இறந்த சரவணனும் அதே நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியும் காதலித்து வந்ததாக தெரிவிக்கப்பட்டது. கடந்த ஆகஸ்ட் மாதம் ஒன்பதாம் தேதி இரவு இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் இந்த தகராறில் சரவணன் இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் ஏற்கனவே ஹஜ் இல்லம் இருக்கா? உண்மையை அம்பலப்படுத்திய TN FACT CHECK...!
இது சிறுமி கொடுத்த வாக்குமூலம் மற்றும் சிசிடிவி ஆதாரங்கள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து சரவணனுடைய காதலி 17 வயது சிறுமி மற்றும் அவரது தங்கை, தந்தை ஆகிய மூன்று பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் உண்மைக்கு புறம்பான செய்திகள் பரவி வருவதாக திண்டுக்கல் மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கோவிலை இடித்து கோரிப்பாளையம் தர்கா கட்டப்பட்டதா? உண்மை நிலவரத்தை சொன்ன TN FACT CHECK..!