×
 

மத்திய அரசின் அவசர அழைப்பு! டெல்லிக்கு அவசரமாக பறந்த தமிழக ஆளுநர் ஆர்லேகர்!

மத்திய அரசிடமிருந்து வந்த அவசர அழைப்பைத் தொடர்ந்து தமிழகப் பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவசரமாக டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார்

மத்திய அரசிடமிருந்து வந்த அவசர அழைப்பைத் தொடர்ந்து, தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களின் பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் வெள்ளிக்கிழமை பிற்பகல் திடீரென டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார். முன்னதாக எந்தவித அதிகாரப்பூர்வப் பயணத் திட்டமும் திட்டமிடப்படாத நிலையில், இந்தத் திடீர் டெல்லி பயணம் அரசியல் மற்றும் நிர்வாக வட்டாரங்களில் பெரும் பரப்பரப்பையும் ஊகங்களையும் ஏற்படுத்தியுள்ளது.

சென்னை விமான நிலையச் செய்திகள் மற்றும் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ள தகவல்களில் வெள்ளிக்கிழமை பிற்பகல் 2:30 மணியளவில் ஆளுநர் அர்லேகர் சென்னையிலிருந்து டெல்லி செல்லும் விமானத்தில் புறப்பட்டார். அவருடன் ஆளுநரின் செயலாளர், தனி உதவியாளர் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் உடன் சென்றனர்.

வியாழக்கிழமை நள்ளிரவு திருவனந்தபுரத்திலிருந்து சென்னை திரும்பிய ஆளுநர், வெள்ளிக்கிழமை கிண்டியில் உள்ள லோக் பவனில் தங்கியிருப்பார் என்றும், வெளிமாநிலப் பயணங்கள் எதுவும் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.  இருப்பினும், டெல்லியிலிருந்து வந்த அவசரத் தகவலைத் தொடர்ந்து, சில மணி நேரங்களுக்கு முன்பாகவே பயணத் திட்டங்கள் மாற்றப்பட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இதையும் படிங்க: நியாயமற்ற நீட் தேர்வை ஒரேடியா தூக்கி எறியுங்க! மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் ஓபன் சவால்!

டெல்லி செல்லும் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், தனது பயணத்தின் போது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் முக்கிய மத்திய அதிகாரிகளைச் சந்தித்துப் பேச வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், இந்த அவசரப் பயணத்திற்கான துல்லியமான காரணம் என்ன என்பதையோ அல்லது அவர் எத்தனை நாட்கள் டெல்லியில் தங்கியிருப்பார் என்பதையோ ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் அதிகாரப்பூர்வமாக இதுவரை தெரிவிக்கவில்லை.

இதையும் படிங்க: E20 பெட்ரோலால் மைலேஜ் குறையும்? ஒப்புக்கொண்ட மத்திய அரசு!! பழைய வாகனங்களுக்கு வார்னிங்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share