×
 

மூன்றே மாதங்களில் இவ்வளவு கோடி வசூலா? - மத்திய அரசின் அட்சய பாத்திரமான ஃபாஸ்டேக்...!

முதல் 3 மாதங்களில் ஃபாஸ்டேக் மூலம் தேசிய நெடுஞ்சாலை கட்டணம் 20% அதிகரித்துள்ளது.

 தேசிய நெடுஞ்சாலைகளில் ஃபாஸ்டேக் வாயிலாக வசூல் செய்யப்படும் டோல் கட்டணம் மத்திய அரசுக்கான முக்கிய நிதி வசூலாக உள்ளது. ஜி.எஸ்.டி. வசூல் கூட சில மாதங்களில் சொதப்பினாலும், ஃபாஸ்டேக் வசூல் மாசம் தவறாமல் கோடிகளில் குவிந்து வருகிறது. 

2025-26 நிதியாண்டின் முதல் காலாண்டில் அதாவது ஏப்ரல்-ஜூன் காலக்கட்டத்தில் ஃபாஸ்டேக் (FASTag) வாயிலாக வசூலிக்கப்படும் சுங்க கட்டணம் 19.6 சதவீதமாக உயர்ந்து, 20,681.87 கோடி ரூபாயாக பதிவாகியுள்ளது என்று தேசிய மின்னணு கட்டண வசூல் (NETC) தரவுகள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: ரூ.3,000 வேண்டாம்.. ரூ.1500-ஆக குறையுங்க.. புதிய 'பாஸ்டேக்' அறிவிப்புக்கு ராமதாஸ் கருத்து..!

ஏப்ரல்-ஜூன் காலாண்டில் டோல் பயனர்களின் எண்ணிக்கையும் 16.2 சதவீதம் அதிகரித்து 1,173 மில்லியனாக உயர்ந்துள்ளது, இது முந்தைய ஆண்டின் இதே காலத்தில் 1,009.87 மில்லியனாக இருந்தது.



இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) ஏப்ரல் 1, 2025 முதல் நாடு முழுவதும் நெடுஞ்சாலைப் பிரிவுகளில் சராசரியாக 4-5 சதவீதம் சுங்கக் கட்டணங்களை உயர்த்தியுள்ளது. மத்திய அரசு நாட்டின் அனைத்து வாகனங்களிலும், அனைத்து சுங்க சாவடிகளிலும் டிஜிட்டல் கட்டண வசூல் முறையை செயல்படுத்த உள்கட்டமைப்புகளை மேம்படுத்தியதன் மூலம் மக்களிடம் திறம்பட கட்டணம் வசூலிக்கப்படுகிறது.



சமீபத்தில், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, தனியார் வாகனங்களுக்கு ரூ.3,000 விலையில் ஃபாஸ்டேக் அடிப்படையிலான வருடாந்திர பாஸை ஆகஸ்ட் 15 முதல் அறிமுகப்படுத்தும் என அறிவித்துள்ளார். இதனால்  நெடுஞ்சாலை பயணம் மேற்கொள்வோர் இனி டோல் கேட்களில் கால தாமதம் இல்லாத, விரைவான பயணத்தை மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: ஒரே ரீசார்ஜ்.. ரூ.3000 தான்.. வருஷம் ஃபுல்லா ஃப்ரீயா போகலாம்.. 'பாஸ்டேக்'கில் வந்தாச்சு புது ரூல்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share