×
 

உங்க வண்டி மேல FINE இருக்கா! மாட்டிப்பீங்க பங்கு... விஷயத்தை தெரிஞ்சுக்கோங்க

வாகனங்களின் அபராத நிலுவைத் தொகையை செலுத்தினால்தான் இன்ஷூரன்ஸ் புதுப்பிக்க முடியும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

போக்குவரத்து விதிமுறைகள் சாலை பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும், வாகன ஓட்டிகளின் ஒழுங்கை பராமரிக்கவும் உருவாக்கப்பட்டவை. இந்தியாவில் மோட்டார் வாகன சட்டம் 1988 மற்றும் அதன் 2019 திருத்தங்கள் இந்த விதிமுறைகளை வரையறுக்கின்றன. இந்தச் சட்டத்தின் கீழ், அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுதல், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல், சிவப்பு விளக்கு மீறல், தடை செய்யப்பட்ட பகுதியில் நிறுத்துதல், ஆவணங்கள் இல்லாமல் வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட பல்வேறு விதிமீறல்களுக்கு அபராதங்கள் விதிக்கப்படுகின்றன.

2019-ஆம் ஆண்டு மோட்டார் வாகன சட்டத் திருத்தம் அபராதத் தொகைகளை கணிசமாக உயர்த்தியது. உதாரணமாக, பொது விதிமீறல்களுக்கு முன்பு 100 ரூபாய் அபராதமாக இருந்தது, தற்போது 500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதற்கு 10,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படலாம். இந்த உயர்வு மக்கள் மத்தியில் பரவலான விவாதத்தை ஏற்படுத்தியது, ஆனால் விபத்துகளை குறைப்பதற்கு இது அவசியமாக கருதப்பட்டது.

அதிவேகமாக வாகனங்களை ஓட்டுதல், ஹெல்மெட் அணியாமல் வாகனங்களை இயக்குதல், நோ என்ட்ரி வழியாக செல்லுதல் என பல போக்குவரத்து விதிமீறல்களுக்கு அபராதம் விதிக்கப்பட்ட வருகிறது. ஆனால் பலரும் போக்குவரத்து விதிமுறைகளுக்காக விதிக்கப்பட்ட அபராத தொகையை கட்டுவதில் அலட்சியம் காட்டுகின்றனர். இதன் காரணமாக அதிரடி உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: Election முடிஞ்சதும் தெரியும் யார் ICU-ல இருக்காங்க-னு ! உதயநிதிக்கு நயினார் பதிலடி

அதில் வாகனங்களுக்கான அபராத நிலுவைத் தொகையை செலுத்தினால்தான் இன்சூரன்ஸ் புதுப்பிக்க முடியும் என்ற புதிய நடைமுறையை சென்னை மாநகர காவல்துறை கொண்டு வந்துள்ளது. போக்குவரத்து விதி மீறலுக்காக விதிக்கப்பட்ட அபராத நிலுவை 300 கோடி ரூபாய் வரை செலுத்தப்படாமல் இருப்பதால் நிலுவைத் தொகையை வசூல் செய்யும் பொருட்கள் நிறுவனங்களுடன் சேர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிகிறது. 

இதையும் படிங்க: “ஆஹா ஒன்னு கூடிட்டாங்கய்யா” - அண்ணாமலைக்கு சப்போர்ட் செய்த நயினார் நாகேந்திரன்... திமுக உ.பி.க்கள் கதறல்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share