×
 

துரோகி!! பாஜகவுக்கு தாவிய ஹர்பஜன் சிங்!! வீட்டு சுவற்றில் எதிர்ப்பை பதிவு செய்த போராட்டக்காரர்கள்!

பாஜகவுக்கு தாவிய ஹர்பஜன் சிங் வீட்டுச் சுவரில் துரோகி என வாசகம் எழுதி போராட்டக்காரர்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

பஞ்சாப்: பாஜகவுக்கு தாவிய முன்னாள் ஆம் ஆத்மி எம்.பி. ஹர்பஜன் சிங்கின் வீட்டுச் சுவரில் “துரோகி” என்ற வாசகத்தை கறுப்பு மையால் எழுதி, ஆம் ஆத்மி கட்சித் தொண்டர்கள் சனிக்கிழமை தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பஞ்சாபில் ஆம் ஆத்மியின் மாநிலங்களவை எம்.பி. ராகவ் சத்தா உள்கட்சிப் பூசல் காரணமாக வெள்ளிக்கிழமை பாஜகவில் இணைந்தார். அவருடன் ஹர்பஜன் சிங் உள்ளிட்ட மொத்தம் 7 ஆம் ஆத்மி எம்.பி.க்கள் பாஜகவுக்கு தாவினர். இந்தக் கட்சித் தாவலை கடுமையாக விமர்சித்த பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், “இவர்கள் அனைவரும் துரோகிகள்” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், கட்சியை விட்டு விலகி பாஜகவில் இணைந்த மறுநாளே ஹர்பஜன் சிங்கின் வீட்டுக்கு முன்பு ஆம் ஆத்மி தொண்டர்கள் திரண்டு போராட்டம் நடத்தினர். போராட்டக்காரர்கள் கறுப்பு மையால் வீட்டுச் சுவரில் பெரிய எழுத்துகளில் “துரோகி” என்று எழுதினர். பலர் தங்கள் கண்களில் கறுப்புத் துணியை கட்டிக்கொண்டு, “துரோகிகளுக்கு இடமில்லை” என்று கோஷங்களை எழுப்பினர். 

இதையும் படிங்க: பஞ்சாப்பில் கவிழ்கிறது ஆம் ஆத்மி அரசு!! பாஜகவுக்கு தாவிய ராகவ் சத்தா கட்டுப்பாட்டில் 63 எம்.எல்.ஏ!!

ஏப்ரல் 2022இல் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஹர்பஜன் சிங், போராட்டம் நடைபெற்ற சமயத்தில் வீட்டில் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. போராட்டம் அமைதியான முறையில் நடைபெற்றதாகவும், எந்த வன்முறையும் ஏற்படவில்லை என்றும் போலீசார் தெரிவித்தனர்.

ஆம் ஆத்மி கட்சியில் இருந்து பாஜகவுக்கு தாவிய 7 எம்.பி.க்களின் நடவடிக்கை பஞ்சாப் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் பகவந்த் மான் தொடர்ந்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். இந்தக் கட்சித் தாவல் ஆம் ஆத்மி கட்சிக்குள் உள்ள உள்கட்சிப் பூசலை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது.

பஞ்சாபில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்தக் கட்சித் தாவல் அரசியல் சமன்பாடுகளை மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹர்பஜன் சிங்கின் வீட்டு சுவரில் எழுதப்பட்ட “துரோகி” வாசகம், ஆம் ஆத்மி தொண்டர்களின் கடும் எதிர்ப்பை தெளிவாக பிரதிபலிக்கிறது.

இந்தச் சம்பவம் பஞ்சாப் முழுவதும் பெரும் பேச்சாக மாறியுள்ளது. போராட்டக்காரர்கள் ஹர்பஜன் சிங் உள்ளிட்டோருக்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: பஞ்சாப்பில் கவிழ்கிறது ஆம் ஆத்மி அரசு!! பாஜகவுக்கு தாவிய ராகவ் சத்தா கட்டுப்பாட்டில் 63 எம்.எல்.ஏ!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share