×
 

பச்சிளம் குழந்தையை கூட விடல... கண்ணீர் வடித்த பாஜக பெண் நிர்வாகி... திருச்சி சூர்யா அதிரடி கைது.. முக்தாருக்கு வலைவீச்சு...!

அலிஷா அப்துல்லா நேற்று அளித்த புகாரின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பாஜக பிரமுகரும் கார் பந்தய வீராங்கனையும், நடிகையுமான அலிஷா அப்துல்லா அளித்த புகாரின் அடிப்படையில், யூடியூபர் திருச்சி சூர்யா கைது செய்யப்பட்டுள்ளார். இதே வழக்கில் தொடர்புடைய மற்றொரு யூடியூபரான முக்தாரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

பாரதிய ஜனதா கட்சியின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளராக உள்ள அலிஷா அப்துல்லா, தன்னைப் பற்றியும் தனது இரட்டைக் குழந்தைகளைப் பற்றியும் சமூக வலைதளங்களில் அவதூறாகவும் ஆபாசமாகவும் பேசியதாக குற்றம்சாட்டி சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்திருந்தார்.

அந்த புகாரில், யூடியூபர்கள் திருச்சி சூர்யா மற்றும் முக்தார் ஆகியோர் தனது குடும்பத்தினரையும், குறிப்பாக தனது பச்சிளம் குழந்தைகளையும் மையப்படுத்தி அருவருக்கத்தக்க வகையில் கருத்துகளை வெளியிட்டதாகவும், இதனால் தனக்கு கடுமையான மனஉளைச்சல் ஏற்பட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இதையும் படிங்க: இன்னும் நல்ல நேரம் வரலையா முதல்வரே..? சிங்கப்பெண் அதிரடிப்படை.... விளாசிய வானதி சீனிவாசன்..!!

சமீபத்தில், தனது இரட்டைக் குழந்தைகளை பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை சந்தித்த புகைப்படத்தை அலிஷா அப்துல்லா சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார். அந்த பதிவை அடிப்படையாகக் கொண்டு, சுமார் 11 நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் திருச்சி சூர்யா மற்றும் முக்தார் ஆகியோர் குழந்தைகள் மற்றும் அலிஷா அப்துல்லாவை குறித்து ஆபாசமாகவும் அவதூறாகவும் பேசியதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பான வீடியோ ஆதாரங்களையும் அலிஷா அப்துல்லா காவல்துறையிடம் சமர்ப்பித்திருந்தார். மேலும், பெண்களைப் பற்றி தொடர்ந்து ஆபாசமான கருத்துகளை வெளியிட்டு வந்தாலும் சம்பந்தப்பட்டவர்கள்மீது இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் தனது புகாரில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் தெற்கு மண்டல சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்து திருச்சி சூர்யா கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில், இந்த வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் முக்தாரை போலீசார் தேடி வருவதாகவும், அவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அலிஷா அப்துல்லா நேற்று அளித்த புகாரின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதையும் படிங்க: பிரதமர் மோடியை சந்திக்கும் அண்ணாமலை!! பாஜக தலைமையுடன் சமரசமா? தனிக்கட்சியா?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share