×
 

கடவுளே விஜய்... ஆள்பவரே விஜய்... மலைக்கோட்டையை அதிர விடும் தவெக தொண்டர்கள்...

விஜய் பிரச்சாரம் செய்யவுள்ள மரக்கடை மற்றும் அவர் வர உள்ள திருச்சி விமான நிலைய பகுதிகளில் தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்கள் சாரை சாரையாய் குவிய ஆரம்பித்துள்ளனர். 

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் முதன்முறையாக திருச்சியிலிருந்து அவரது சுற்று பயணத்தை தொடங்குகிறார். 

தமிழக சட்டமன்ற தேர்தலை மையமாக வைத்து விஜய் இன்று திருச்சியில் பிரச்சாரம் மேற்கொள்வது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இதற்கு முன்பு இருந்தக்கூடிய அரசியல் தலைவர்கள் முன்னாள் முதலமைச்சர்கள் திருச்சியை திருப்புமுனை என்று சொல்லி வந்த நிலையில், விஜய் பிரச்சாரம் செய்கிறார். விஜய் பிரச்சாரம் செய்யவுள்ள மரக்கடை மற்றும் அவர் வர உள்ள திருச்சி விமான நிலைய பகுதிகளில் தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்கள் சாரை சாரையாய் குவிய ஆரம்பித்துள்ளனர். 

அங்குள்ள தொண்டர்கள், விஜய் அண்ணா வராங்கன்னு சொன்னனுமே காலையிலேயே வந்துட்டேன். கண்டிப்பாக 2026 நம்ம அண்ணன், விஜய் அண்ணாதான் வருவாங்க. இனி வர ஜெனரேஷன் ஃபுல்லாவே இதுதான் இதுல எந்த மாற்றமுமே இல்ல. விஜய் அண்ணா பிரச்சாரத்திற்கு காவல்துறை பல கட்டுப்பாடுகள் போட்டுருக்காங்க. கட்டுப்பாடு எல்லாம் போடதான் செய்வாங்க. போட போட போட எல்லா கட்டுப்பாடையும் எல்லாமே உடைச்சிட்டு தளபதி வந்து நிப்பாரு. 2026 தேடி கண்டிப்பா தளபதிதான் வெற்றி பெருவிழா நடக்கும்” என உற்சாகத்துடன் ஊடகங்களுக்கு தெரிவித்து வருகின்றனர். 

இதையும் படிங்க: அதெல்லாம் அரசியல் சர்வீஸ் இல்லாத கட்சி... தவெகவை தவிடு பொடியாக்கிய துரைமுருகன்...!

அங்காங்கே குவிந்து நிற்கக்கூடிய தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் “கடவுளே விஜய்... ஆள்பவரே விஜய்” போன்ற முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். மற்றொருபுறம் பெண்கள் கும்பியடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். விஜய் வருகையை அடுத்து திருச்சி நகரையே விழா கோலம் பூண்டது போல் தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் மாற்றியுள்ளனர். 

இதையும் படிங்க: “ஷப்பா இப்பவே கண்ண கட்டுதே”... சுற்றுபயணத்தில் விஜய்க்கு வந்த புது சிக்கல்.... தவெக நிர்வாகிகளால் தலைவலி...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share