×
 

நீ பைத்தியம்!! நான் இல்லையினா ஜெயிலுக்கு போயிருப்ப!! நெதன்யாகுவை வெளுத்து வாங்கிய ட்ரம்ப்!

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடனான தொலைப்பேசி உரையாடலின்போது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்ததாக ஆக்சியோஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் தொலைப்பேசியில் உரையாடியபோது கடும் கோபத்துடன் பேசியதாக ஆக்சியோஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா ஆயுதக் குழுவினருக்கு எதிராக இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் இஸ்ரேல்-லெபனான் இடையே சண்டை நிறுத்தம் ஏற்பட்டிருந்தது. ஆனால் இஸ்ரேல் தாக்குதலை நிறுத்தாததால் ஈரான், அமெரிக்காவுடனான போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையை நிறுத்துவதாக அறிவித்தது.

இந்நிலையில் திங்கள்கிழமை டிரம்ப், நெதன்யாகுவை தொலைப்பேசியில் தொடர்புகொண்டு பேசினார். அப்போது டிரம்ப் மிகவும் கோபமாக பேசியதாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் ஆக்சியோஸ் நிறுவனத்திடம் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: இஸ்ரேல் பிரதமர் - அமெரிக்க அதிபர் நட்பில் விரிசல்?! ஈரான் போரை தொடரலாமா? வேண்டாமா? காரசார விவாதம்!

“நீங்கள் ஒரு பைத்தியம். நான் இல்லையென்றால் நீங்கள் இப்போது சிறையில் இருந்திருப்பீர்கள். நான் உங்களைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறேன். இப்போது அனைவரும் உங்களை வெறுக்கிறார்கள். இதனால் இஸ்ரேலையும் வெறுக்கிறார்கள்” என டிரம்ப் கூறியதாக செய்தி வெளியாகியுள்ளது.

இந்த உரையாடலுக்குப் பிறகு டிரம்ப் சமூக வலைதளத்தில், “அனைத்து விதமான துப்பாக்கிச் சூடு தாக்குதல்களும் நிறுத்தப்படும். இஸ்ரேல் ஹிஸ்புல்லாவைத் தாக்காது, ஹிஸ்புல்லாவும் இஸ்ரேலைத் தாக்காது” என பதிவிட்டார்.

இதற்கு பதிலளித்த நெதன்யாகு, “ஹிஸ்புல்லா இஸ்ரேல் நகரங்கள் மற்றும் மக்களைத் தாக்குவதை நிறுத்தாவிட்டால், பெய்ரூட்டில் உள்ள பயங்கரவாத இலக்குகளை இஸ்ரேல் தாக்கும். எங்களின் இந்த நிலைப்பாடு மாறவில்லை. தெற்கு லெபனானில் இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் திட்டமிட்டபடி செயல்படும்” என தெரிவித்தார்.

இஸ்ரேல்-ஹிஸ்புல்லா இடையிலான பதற்றம் தொடரும் நிலையில், அமெரிக்க அதிபரின் கடும் எச்சரிக்கை உலக அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய கிழக்கு அமைதிக்கான அமெரிக்காவின் முயற்சிகள் எந்த அளவுக்கு வெற்றி பெறும் என்பது அடுத்த நாட்களில் தெரியவரும்.

இதையும் படிங்க: ஹார்முஸ் ஜலசந்தி அருகே ஈரானின் ராணுவ தளம்!! வான்வழி தாக்குதல் நடத்திய அமெரிக்கா! போர் பதற்றம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share