×
 

தென் ஆப்பிரிக்காவை கரித்து கொட்டும் ட்ரம்ப்!! ஜி 20 உச்சிமாநாடு புறக்கணிப்பு!! அதிபர் சொல்லும் காரணம்?!

தென்ஆப்பிரிக்காவில் ஜி20 உச்சிமாநாடு நடைபெற உள்ளது. நான் அதில் பங்கேற்க மாட்டேன் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஆப்பிரிக்க கண்டத்தில் முதல் முறையாக நடைபெற உள்ள ஜி20 உச்சி மாநாட்டை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் நவம்பர் 22, 23 தேதிகளில் நடைபெறும் இந்த மாநாட்டில், தென்ஆப்பிரிக்காவின் தலைமையில் உலகின் 20 பெரும் பொருளாதார நாடுகள் கலந்துகொள்கின்றன. ஆனால் டிரம்ப், "தென்ஆப்பிரிக்கா ஜி20-ல் இருக்கக் கூடாது. அங்கு நடக்கும் விஷயங்கள் மோசமானவை. நான் செல்ல மாட்டேன்" என்று கடுமையாகக் கூறியுள்ளார். இந்த அறிவிப்பு, உலக அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஜி20 அமைப்பு, ஒவ்வொரு ஆண்டும் உறுப்பு நாடுகளில் ஒன்று தலைமை ஏற்கிறது. 2022 டிசம்பரில் இருந்து 2023 நவம்பர் வரை இந்தியா தலைமை ஏற்றது. டெல்லியில் 2023 செப்டம்பரில் நடந்த 18-வது உச்சி மாநாட்டில், அப்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உட்பட பல உலக தலைவர்கள் கலந்துகொண்டனர். அப்போது இந்தியாவின் முயற்சியில், ஆப்பிரிக்க ஒன்றியம் ஜி20-ல் நிரந்தர உறுப்பினராக சேர்க்கப்பட்டது. 

இதன் தொடர்ச்சியாக, 2024 டிசம்பர் 1 முதல் 2025 நவம்பர் வரை தென்ஆப்பிரிக்கா தலைமை ஏற்றுள்ளது. ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெறும் இந்த உச்சி மாநாடு, ஆப்பிரிக்காவின் பொருளாதார வளர்ச்சி, வர்த்தகம், சுற்றுச்சூழல் போன்ற தலைப்புகளை மையமாகக் கொண்டுள்ளது. ஆனால் டிரம்பின் புறக்கணிப்பு, இந்த மாநாட்டின் முக்கியத்துவத்தை குறைக்கும் என அச்சம் நிலவுகிறது.

இதையும் படிங்க: ஹை அலர்ட்டில் பரமக்குடி... அனுமதியின்றி குவிந்த 220 பேரைக் குண்டு கட்டாக தூக்கிய போலீஸ்...!

மியாமியில் நடந்த அமெரிக்க வணிக மன்றத்தில் பேசிய டிரம்ப், செய்தியாளர்களிடம் திட்டவட்டமாகக் கூறினார்: "தென்ஆப்பிரிக்காவில் ஜி20 உச்சி மாநாடு நடைபெற உள்ளது. நான் அதில் பங்கேற்க மாட்டேன். தென்ஆப்பிரிக்கா இனி ஜி20 கூட்டமைப்பில் இருக்கக் கூடாது. ஏனெனில் அந்நாட்டில் நடக்கும் விஷயங்கள் மோசமாக உள்ளன. அங்கு அந்த உச்சி மாநாடு நடைபெறக் கூடாது. நான் செல்ல மாட்டேன் என்பதை அவர்களிடம் சொல்லிவிட்டேன். தென்ஆப்பிரிக்காவில் எங்கள் நாட்டை பிரதிநிதித்துவப்படுத்த நான் விரும்பவில்லை." 

இந்த வார்த்தைகள், டிரம்பின் தென்ஆப்பிரிக்கா விமர்சனத்தின் தொடர்ச்சி. மே மாதம் வெள்ளை மாளிகையில் தென்ஆப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசாவுடன் சந்தித்தபோது, 'வெள்ளை விவசாயிகள் மீது ஆப்ரிக்கர்கள் இனவெறி தாக்குதல் நடத்துவதாகவும்' மற்றும் 'அவர்களின் நில சூறையாடப்படுவதாகவும் ' என்று குற்றச்சாட்டுகளை எழுப்பினார். இதனால் அமெரிக்கா தென்ஆப்பிரிக்காவுக்கு நிதி உதவியை நிறுத்தியது.

தென்ஆப்பிரிக்கா, இந்த குற்றச்சாட்டுகளை 'பொய்' என்று மறுத்துள்ளது. அந்நாட்டின் 'கருப்பின பொருளாதார மேம்பாடு' (BEE) கொள்கை, அபார்த்தெயிட் கால சாதி வேறுபாட்டை சரிசெய்யும் முயற்சி என்று அந்நாட்டு அரசு விளக்கியுள்ளது. ராமபோசா, டிரம்பை உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள அழைத்திருந்தார். ஆனால் டிரம்ப், தனது துணை அதிபர் ஜே.டி. வான்ஸை அனுப்புவதாக தெரிவித்துள்ளார். இது, அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையில் புதிய பிளவை உருவாக்கலாம். 

ஜூலை மாதத்தில் டிரம்ப், "தென்ஆப்பிரிக்காவுடன் பல சிக்கல்கள் உள்ளன. அவர்களின் கொள்கைகள் மோசமானவை" என்று கூறியிருந்தார். பிப்ரவரியில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, தென்ஆப்பிரிக்காவில் நடந்த ஜி20 வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தை புறக்கணித்தார்.

இந்த புறக்கணிப்பு, ஜி20-ன் ஒற்றுமையை சவாலுக்கு உள்ளாக்கும். தென்ஆப்பிரிக்கா, ஆப்பிரிக்காவின் பொருளாதார வளர்ச்சிக்கு இந்த மாநாட்டைப் பயன்படுத்த விரும்புகிறது. டிரம்பின் குற்றச்சாட்டுகள், அந்நாட்டின் நில சீர்திருத்தக் கொள்கையை (வெள்ளை உரிமையாளர்களிடமிருந்து நிலங்களை பறிக்கும்) இலக்காகக் கொண்டுள்ளன. ஆனால் தென்ஆப்பிரிக்கா, "இது சாதி சமநிலைக்கானது" என்று உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த சர்ச்சை, உலக அரசியலில் புதிய அலையை உருவாக்கியுள்ளது. ஜி20 உச்சி மாநாடு, உலக பொருளாதாரத்தின் எதிர்காலத்தை முடிவு செய்யும் என்பதால், டிரம்பின் இந்த முடிவு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: ரூ. 20 லட்சம் வரை வைப்புத் தொகை... ரோடு ஷோ வழிகாட்டு நெறிமுறைக்கான பரிந்துரை வெளியீடு...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share