×
 

இந்தியா தலையில் இடியை இறக்கிய டிரம்ப்... எந்தெந்த துறைக்கு என்னென்ன பாதிப்புகள் ஏற்படக்கூடும்?

2024ஆம் ஆண்டில் 10.8 8 பில்லியன் டாலர் மதிப்புக்கு அமெரிக்காவுக்கு ஆடை ஏற்றுமதி செய்யப்பட்டு வரும் நிலையில் புதிய வரிவிதிப்பால் ஜவுளி துறையில் ஆர்டர் அளவு குறையும் என்றும், வேலை பறிபோகும்ம் என்றும் அச்சம் நிலவுகிறது. 

இந்தியாவிலிருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் 25% வரிவிதிப்பு காரணமாக எந்தெந்த துறைகள் பாதிக்க கூடும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம், 

இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு நாளை முதல் 25% வரிவிதிக்கப்பட உள்ளதாக அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். ட்ரம்பின் இந்த நடவடிக்கை காரணமாக ஆண்டுக்கு 129 பில்லியன் டாலர் மதிப்புள்ள இருதரப்பு வர்த்தகமும் பாதிக்கும். இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படும் மருந்து பொருட்கள், வைரம் மற்றும் நகைகள், ஜவுளி ஆடைகள், இயந்திரங்கள், ரசாயனங்கள், வாகனங்கள் மற்றும் இரும்பு, பித்தளை பொருட்கள் போன்ற முக்கியமான இந்திய ஏற்றுமதி துறைகளை பாதிக்கும் என்று அஞ்சப்படுகிறது. 

2025 நிதியாண்டில் இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு 10 பில்லியன் டாலர்களுக்கு மேல் ஜெனரிக் மருந்துகள் மற்றும் மருந்து மூல பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. புற்றுநோய், நீரிழிவு, இதயம் மற்றும் தொற்று நோய்களுக்கான முக்கிய மருந்துகள் இதில் அடங்கும். இந்திய ஜெனரிக் மருந்துகளுக்கான வரிஅமெரிக்க நோயாளிகள் மற்றும் மருத்துவமனைகளுக்கான மருந்து செலவுகளை அதிகரிக்க கூடும். 2024ஆம் ஆண்டில் 10.8 8 பில்லியன் டாலர் மதிப்புக்கு அமெரிக்காவுக்கு ஆடை ஏற்றுமதி செய்யப்பட்டு வரும் நிலையில் புதிய வரிவிதிப்பால் ஜவுளி துறையில் ஆர்டர் அளவு குறையும் என்றும், வேலை பறிபோகும்ம் என்றும் அச்சம் நிலவுகிறது. 

இதையும் படிங்க: மோடி சேவை கார்ப்பரேட்டுகளுக்கு மட்டுமே... எம்.பி சு.வெங்கடேசன் கடும் சாடல்

திருப்பூர், ஈரோடு, கரூர் உள்ளிட்ட ஊர்களில் ஊர்ல இருக்கக்கூடிய டெக்ஸ்டைல் பர்னிஷிங்ஸ், ரெடிமேட் கார்மெண்ட்ஸ் எல்லாம் அமெரிக்காவிற்கு அதிக அளவில் எக்ஸ்போர்ட் செய்கிறது. டிரம்ப் உடைய 25 சதவீத வரி நாளை முதல் அமலாகும் பட்சத்தில் கொங்கு மண்டலத்திற்கு இது மிகப்பெரிய அடியாக இருக்கும். 

ஜவுளிக்கு அடுத்தபடியாக நகைகள் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. 2025 நிதியாண்டில் இந்தியா 12 பில்லியன் டாலர் அளவுக்கு வைரங்கள் மற்றும் நகைகளை ஏற்றுமதி செய்தது. 30% அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. ஏற்கனவே அமெரிக்காவில் நகைகள் மீதான வரி விதிப்பு 27%ஆக இருக்கும் நிலையில் கூடுதலாக 25% வரி விதிக்கப்படுகிறது.

2024ஆம் ஆண்டில் இந்தியா 2.8  பில்லியன் டாலர் மதிப்புள்ள ஆட்டோ உதிரி பாகங்களை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்துள்ளது. இதில் இயந்திர பாகங்கள், பிரேக்குகள், கியர் மற்றும் வயரிங் ஹார்னஸ்கள் அடங்கும். இதன் மூலம் 25% வரி கார் பழுது பார்க்கும் செலவுகளை அதிகரிக்க கூடும் மற்றும் உதிரி பாகங்கள் ஏற்றுமதியை சீர்குழைக்க கூடும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். 

டெலிகாம் ப்ராடக்ட்ஸ், அயன் அண்ட் ஸ்டீல், துணிகள், ஆயத்த ஆடைகள், தோல் பொருட்கள், ஜெம்ஸ், கோல்ட் இதை போன்ற அதிகமான உற்பத்தி பணியாளர்களை கொண்ட தொழில்கள் அமெரிக்காவிற்கு அதிகமாக ஏற்றுமதி செய்யப்படுகிறது. இன்றைக்கு இந்த பாதிப்பினால் நிச்சயமாக இந்தியா சந்திக்க போவது இரண்டு. ஒன்று  வேலை இழப்பு மற்றும் வேலை குறைப்பு.

இந்தியாவிலிருந்து செல்போன்கள் மொத்த ஏற்றுமதியில் பெரும்பகுதி அமெரிக்காவுக்கு செல்கிறது. 2025ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் பாக்ஸ் கான் ஏற்கனவே 4.4 பில்லியன் டாலர் மதிப்புள்ள 2 கோடிய 40 லட்சம் ஐபோன்களை அமெரிக்காவிற்கு அனுப்பி உள்ள நிலையில் தற்போதைய வரிவிதிப்பால் ஐபோன் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கும் என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
 

இதையும் படிங்க: தரையில் விழுந்து நொறுங்கிய போர் விமானம்.. தூக்கி வீசப்பட்ட விமானி.. பாதுகாப்பானதா F-35!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share