H1B விசா கட்டணத்தில் எதிர்பாராத அடி! அந்தர் பல்டி அடித்த அமெரிக்கா! மனம் மாறிய ட்ரம்ப்!
அமெரிக்காவில் வெளிநாட்டினர் தங்கி இருந்து வேலை பார்க்க அந்த நாடு வழங்கி வரும் H-1B விசா கட்டணத்தை ஒரு லட்சம் டாலராக அதிபர் டிரம்ப் உயர்த்தினார். இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 88 லட்சம் ரூபாய்.
அமெரிக்காவில் வெளிநாட்டினர் வேலை பார்க்க H-1B விசாவின் கட்டணத்தை 10,000 டாலரில் இருந்து 1 லட்சம் டாலராக (தோராயமாக 88 லட்சம் ரூபாய்) உயர்த்திய அதிபர் டொனால்ட் டிரம்பின் உத்தரவு இந்தியாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் H-1B விசாக்களில் 70% இந்தியர்களுக்கே சென்றதால், ஐ.டி., மருத்துவத் துறைகளில் பெரும் பாதிப்பு ஏற்படும் என அச்சம் நிலவியது. ஆனால், மருத்துவத் துறையில் டாக்டர்களுக்கு மட்டும் இந்த கட்டணத்தில் விலக்கு அளிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இது இந்தியாவிலிருந்து செல்லும் டாக்டர்களுக்கு ஆறுதல் அளிக்கிறது.
செப். 21 காலை 9:30 மணிக்கு (இந்திய நேரப்படி) நடைமுறைக்கு வந்த இந்த உத்தரவு, அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் நோக்கில் பிறப்பிக்கப்பட்டது. முந்தைய கட்டணம் 5 லட்சம் ரூபாய்க்கும் குறைவாக இருந்தது. இப்போது, புதிய விண்ணப்பங்களுக்கு 88 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும்.
இதையும் படிங்க: அமெரிக்காவுக்கு இந்தியா ரொம்ப முக்கியம்!! மொத்தமாக சரணடைந்த அமெரிக்க அமைச்சர்!
H-1B விசா அதிகபட்சம் 6 ஆண்டுகளுக்கு நீட்டிக்கலாம்; அதன் பின் புதிய விண்ணப்பம் தேவைப்படும். இந்த கட்டணத்தை அமெரிக்க கம்பெனிகளே செலுத்த வேண்டும் என்பதால், அவை வெளிநாட்டு ஊழியர்களை (குறிப்பாக இந்தியர்களை) ஹிர் செய்ய தயங்கலாம். இதன் விளைவு, அமெரிக்கர்களுக்கு வேலைகள் அதிகரிக்கும் என்று டிரம்ப் நம்புகிறார்.
அமெரிக்காவின் டெக் கம்பெனிகளில் (எ.கா., அமேசான், மைக்ரோசாப்ட்) இந்தியர்கள் நிரம்பி வழிகின்றனர். 2025 முதல் பாதியில் மட்டும் 12,000-க்கும் மேற்பட்ட H-1B விசாக்கள் இந்தியர்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன. இந்த உயர்வு, அவர்களின் வேலைவாய்ப்புகளை பாதிக்கும் என்பதால் இந்தியாவில் கடும் விமர்சனங்கள் எழுந்தன.
அமெரிக்காவில் ஏற்கனவே 7.6 கோடி மக்களுக்கு டாக்டர்கள் பற்றாக்குறை உள்ளது. கிராமங்கள், நடுத்தர நகரங்களில் இது கடுமையானது. இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து வரும் டாக்டர்கள் தான் இந்தப் பற்றத்தை நிரப்புகின்றனர்.
புதிய கட்டண உயர்வால் அவர்கள் அமெரிக்காவைத் தவிர்க்கலாம் என்பதால், மருத்துவமனைகள் கடும் அச்சம் அடைந்தன. "இது தரமான சிகிச்சையை பாதிக்கும்; கிராமங்களில் மக்கள் அவதிப்படுவார்கள்" என்று அமெரிக்க மருத்துவமனைகள் அரசுக்கு கடிதங்கள் எழுதின.
அமெரிக்க டாக்டர்கள் சங்கத் தலைவர் பாபி முக்கமாலா, "சர்வதேச டாக்டர்களின் பங்களிப்பு மிக முக்கியம். இந்த உயர்வு கிராமப்புற மருத்துவத்தை அழித்துவிடும்" என்று கடுமையாக விமர்சித்தார். இத்தகைய எதிர்ப்புகளால், வெள்ளை மாளிகை விரைவாக நடவடிக்கை எடுத்தது.
புளும்பெர்க் ஊடகத்திடம் பேசிய வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் டெய்லர் ரோஜர்ஸ், "1 லட்சம் டாலர் கட்டண உத்தரவில் டாக்டர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கிறோம்" என்று உறுதி செய்தார். இது மருத்துவர்கள், மருத்துவ ரெசிடெண்ட்கள் ஆகியோருக்கு பொருந்தும். ஏற்கனவே விசா உள்ளவர்கள், 2025 லாட்டரியில் பங்கேற்றவர்கள் இதிலிருந்து விலக்கு பெறுவர். இந்த முடிவு, அமெரிக்காவின் சுகாதாரத் துறையை பாதுகாக்கும் அதே நேரம், இந்திய டாக்டர்களுக்கு நம்பிக்கை அளிக்கும்.
இந்தியாவின் ஐ.டி. துறை இன்னும் பாதிப்படையும் என்றாலும், மருத்துவத் துறைக்கு இது நல்ல செய்தி. அமெரிக்காவின் இந்த முடிவு, வெளிநாட்டு திறமைகளின் முக்கியத்துவத்தை ஒப்புக்கொள்வதாகும்.
இதையும் படிங்க: மோடிஜிக்கு நன்றி சொல்லுங்க... பலகாரக் கடைக்கு விசிட் அடித்த வானதி ஸ்ரீனிவாசன்...!