BREAKING! 48 மணிநேரம் கெடு!! ஹார்முஸ் ஜலசந்தியை திறக்காவிட்டால்?!! ஈரானுக்கு அதிபர் ட்ரம்ப் வார்னிங்!
48 மணி நேரத்தில் ஹார்முஸ் ஜலசந்தியை முழுமையாக திறக்க வேண்டும். இல்லை என்றால் ஈரானின் மொத்த மின் கட்டமைப்புகளையும் தகர்ப்போம் என ஈரானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மத்திய கிழக்கில் அமெரிக்கா-இஸ்ரேல்-ஈரான் இடையிலான போர் 22-வது நாளை எட்டியுள்ள நிலையில், பதற்றம் உச்சக்கட்டத்தைத் தொட்டுள்ளது. உலகின் மிக முக்கிய எண்ணெய் வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியதால், சர்வதேச கப்பல் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் உலகளாவிய கச்சா எண்ணெய் விலை பெருமளவில் உயர்ந்து, பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
ஈரான் தரப்பில் அரபு நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கத்தார், சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகளின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதால், பதற்றம் மேலும் அதிகரித்தது. இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
டிரம்ப் தனது சமூக வலைதளப் பதிவில், “அடுத்த 48 மணி நேரத்திற்குள் ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை எந்த அச்சுறுத்தலும் இன்றி முழுமையாகத் திறக்காவிட்டால், அந்நாட்டின் பல்வேறு மின் நிலையங்களைத் தாக்கி அழிப்போம். அதில் மிகப் பெரிய மின் நிலையம் முதலில் இலக்காகும்” என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: இறங்கி வரும் அமெரிக்கா! இறுமாப்பு காட்டும் ஈரான்!! போர் நிறுத்த கோரிக்கை நிராகரிப்பு!! நீடிக்கும் மோதல்!
உலகின் 20 சதவீத எண்ணெய் வழியாகச் செல்லும் இந்த ஜலசந்தி மூடப்பட்டதால், பல நாடுகள் பெரும் இழப்பைச் சந்தித்து வருகின்றன. இதைத் தொடர்ந்து பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் உள்ளிட்ட 22 நாடுகள் கூட்டாக அறிக்கை வெளியிட்டு, ஈரானை தாக்குதல்களை நிறுத்தி ஹார்முஸை உடனடியாகத் திறக்குமாறு வலியுறுத்தியுள்ளன.
தாக்குதல்களும் எதிர்த் தாக்குதல்களும் தீவிரமடைந்து வரும் இந்தப் போரில், டிரம்ப்பின் புதிய 48 மணி நேர அல்டிமேட்டம் மத்திய கிழக்கு நிலைமையை மேலும் சிக்கலாக்கும் அபாயம் உள்ளது. உலக நாடுகள் அனைத்தும் இந்தப் பதற்றத்தை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன. எண்ணெய் விலை உயர்வு, உணவுப் பொருள் பற்றாக்குறை உள்ளிட்ட பாதிப்புகள் உலகம் முழுவதும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளன.
இந்த நெருக்கடி விரைவில் தீர்வு காணப்படாவிட்டால், உலகப் பொருளாதாரம் பெரும் அதிர்ச்சியைச் சந்திக்கும் என உலக வங்கி உள்ளிட்ட அமைப்புகள் எச்சரித்துள்ளன.
இதையும் படிங்க: US போர் விமானங்கள் இறங்க தடை! இலங்கை செய்த தரமான சம்பவம்!! அமெரிக்காவுக்கு விழுந்த அடி!