×
 

ரஷ்ய துணை பிரதமருடன் சந்திப்பு! மோடி போடும் பக்கா ஸ்கெட்ச்! அமெரிக்கா ஆட்டத்துக்கு கல்தா!

பிரதமா் நரேந்திர மோடியை ரஷிய துணை பிரதமா் திமித்ரி பாத்ருஷெவ் டெல்லியில் சந்தித்துப் பேசினாா். வேளாண்மை, உரங்கள், உணவு பதப்படுத்துதல் உள்பட பரஸ்பர நலன் சாா்ந்த துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவது குறித்து இருவரும் ஆலோசனை மேற்கொண்டனா்.

அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதால், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியா மீது 50 சதவீத இறக்குமதி வரியை அண்மையில் விதித்துள்ளார்.

இந்த வரி, இந்தியாவின் அமெரிக்கா மீதான ஏற்றுமதியை பெரிதும் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரஷ்யாவுடனான இந்தியாவின் எரிசக்தி தொடர்புகள் குறித்து டிரம்ப் தொடர்ந்து கவலை தெரிவித்து வருவதால், இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

இந்தச் சூழலில், இந்தியா-ரஷ்யா இடையிலான 23-ஆவது வருடாந்திர மாநாட்டில் பங்கேற்க ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதின் டிசம்பரில் இந்தியாவுக்கு வருகை தர உள்ளார். அவரது பயணத்துக்கான முன்னேற்பாடுகளின் ஒரு பகுதியாக, ரஷ்ய துணைப் பிரதமர் திமித்ரி பாத்ருஷெவ் தலைமையிலான குழு இந்தியாவை சந்தித்துள்ளது.

இதையும் படிங்க: போதும்! நிறுத்திக்குங்க! இனி அப்படி பண்ணாதீங்க! ரஷ்யாவிற்கு இந்தியா விடுத்த கோரிக்கை!

தில்லியில், பிரதமர் நரேந்திர மோடியை வியாழக்கிழமை (செப்டம்பர் 25) இரவு சந்தித்த பாத்ருஷெவ், இருதரப்பு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார். இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பின்படி, வேளாண்மை, உரங்கள், உணவு பதப்படுத்துதல் உள்ளிட்ட பரஸ்பர நலன் சார்ந்த துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து இருவரும் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர். அதிபர் புதினை வரவேற்க தாம் ஆவலுடன் உள்ளதாக பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 26), பாத்ருஷெவ் மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹானை கிருஷி பவனில் சந்தித்தார். அப்போது, வேளாண் துறையில் சமநிலையான வர்த்தகம், தொழில்நுட்ப கூட்டாண்மை, ரஷ்யாவுக்கான இந்திய வேளாண் பொருட்களின் ஏற்றுமதியை விரிவுபடுத்துதல் குறித்து விவாதிக்கப்பட்டது.

அமெரிக்காவின் வரி விதிப்புக்கு இடையே, ரஷ்ய கடல் உணவுச் சந்தையில் இந்தியாவின் கவனம் அதிகரித்துள்ளது. வரி அல்லாத தடைகள் உள்ளிட்ட நிலுவைப் பிரச்சினைகள் குறித்தும் பேச்சுவார்த்தை நடந்தது.

ரஷ்யாவிடமிருந்து உரங்கள், மஞ்சள் பட்டாணி, சூரியகாந்தி மற்றும் சோயா பீன்ஸ் எண்ணெய் இறக்குமதி கடந்த சில ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. குறிப்பாக, 2023-24 காலகட்டத்தில் ரஷ்யாவிடமிருந்து உர இறக்குமதி 26 சதவீதம் உயர்ந்தது. சோயா எண்ணெய் இறக்குமதி 60 சதவீதம், சூரியகாந்தி எண்ணெய் 49 சதவீதத்திலிருந்து 51 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இந்திய-அமெரிக்க உறவில் ஏற்பட்ட பின்னடைவுக்கு இடையே, புதினின் வருகை இரு நாடுகளின் உறவை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. வேளாண், எரிசக்தி துறைகளில் ஒத்துழைப்பு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.

இதையும் படிங்க: இந்தியாவுக்கு அமெரிக்கா வரி விதிச்சது கரெக்ட்தான்!! ட்ரம்புக்கு வக்காலத்து வாங்கும் ஜெலன்ஸ்கி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share