×
 

பாகிஸ்தானை மொத்தமாக ஆட்டையை போடும் அமெரிக்கா! ட்ரம்பை நம்பியதால் மொத்தமும் காலி! பகீர் பின்னணி!

இந்தியா அடிபணியவில்லை. ரஷ்யா, சீனா நட்பை வலுப்படுத்தி அமெரிக்காவை அலறவிட்டது. பாகிஸ்தான் அப்படி அல்ல. அமெரிக்காவின் ஆதரவை பெறுவதற்காக அந்த நாட்டிடம் சரண் அடைந்து விட்டது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் இரண்டாவது பதவிக்காலத்தில், அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை 'பிசினஸ் முதல்' எனும் கொள்கையைப் பின்பற்றி வருவதாக விமர்சகர்கள் கூறுகின்றனர். இதன் தாக்கமாக, பாகிஸ்தானின் அரிய கனிம வளங்களை அமெரிக்காவுக்கு அள்ளிக்கொடுக்கும் $500 மில்லியன் (சுமார் 4,440 கோடி ரூபாய்) ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. 

இது இந்தியா-பாகிஸ்தான் உறவில் புதிய சூழலை உருவாக்கியுள்ளது. முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் பிடிஐ (பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப்) கட்சி இந்த 'ரகசிய ஒப்பந்தத்தை' கடுமையாக விமர்சித்து, 'தேசத்தை கொள்ளையடிக்கும் செயல்' என சாடியுள்ளது.

கடந்த செப்டம்பர் 8 அன்று, பாகிஸ்தானின் ராணுவத்தைச் சேர்ந்த ஃப்ரன்டியர் வொர்க்ஸ் ஆர்கனைசேஷன் (FWO) மற்றும் அமெரிக்காவின் US ஸ்ட்ராடஜிக் மெட்டல்ஸ் (USSM) நிறுவனம் இடையே MoU கையெழுத்தானது. இதன் கீழ், அமெரிக்காவுக்கு அரிய கனிமங்கள் உள்ளிட்ட வளங்களை வழங்குவதற்கான முதல் கட்ட அனுப்புதல் அக்டோபர் 2 அன்று நடந்தது. 

இதையும் படிங்க: ட்ரம்ப்பின் போர் நிறுத்த திட்டம்! எகிப்தில் இஸ்ரேல் -ஹமாஸ் பேச்சுவார்த்தை! காசா எதிர்ப்பார்ப்பு!

இந்த அனுப்புதலில், ஆண்டிமனி, தாமிரக் குவிமான்ஸ், நியோடிமியம், பிராசியோடிமியம் உள்ளிட்ட அரிய கனிமங்கள் அடங்கும். இந்த ஒப்பந்தம் மூன்று கட்டங்களாக அமைந்துள்ளது: முதல் கட்டம் (2025-2026) - உடனடி ஏற்றுமதி; இரண்டாவது - செயலாக்கத் தொழிற்சாலைகள் அமைப்பு; மூன்றாவது - ஆய்வு மற்றும் சுரங்கப் பணிகள்.

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் மிகுந்த அளவில் இக்கனிமங்கள் கிடைக்கின்றன. பாகிஸ்தான் அரசின் மதிப்பீட்டின்படி, நாட்டின் கனிம வளங்கள் $6 டிரில்லியன் (சுமார் 500 லட்சம் கோடி ரூபாய்) மதிப்புடையவை. ஆனால், சுரங்கத் தொழில்நுட்பமும், பொருளாதார வலிமையும் இல்லாததால், பாகிஸ்தான் இவற்றைத் தனியாகப் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. 

இதைப் பயன்படுத்தி, டிரம்ப் நிர்வாகம் பாகிஸ்தானுடன் நெருக்கமாகியுள்ளது. கடந்த செப்டம்பர் கடைசி வாரம், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷரீஃப் மற்றும் ராணுவத் தளபதி அசிம் முனீர் வெள்ளை மாளிகையில் டிரம்பை சந்தித்தபோது, அரிய கனிமங்களை அடுக்கிய சிறிய மரப்பெட்டியை காட்டி விளக்கினர். அந்த சந்திப்பிலிருந்து ஒரே வாரத்தில், முதல் கட்ட அனுப்புதல் நடந்தது.

டிரம்பின் 'அமெரிக்கா ஃபர்ஸ்ட்' கொள்கையின் ஒரு பகுதியாக, அமெரிக்கா சீனாவின் கனிம கைப்பற்றலிலிருந்து விடுபட முயல்கிறது. இந்தியாவுடன் மோதல் ஏற்பட்டதற்கு காரணமாக, இந்தியா அமெரிக்காவின் மரபணு மாற்றப்பட்ட காய்கறி, பழங்கள் ஏற்றுமதிக்கு மறுத்ததால், டிரம்ப் 50% வரி விதித்தார். இந்தியா ரஷ்யா, சீனா நட்பை வலுப்படுத்தி எதிர்த்தது. 
ஆனால், பாகிஸ்தான் அமெரிக்காவின் ஆதரவைப் பெற, 'ஆம் சார்' என்று தலையாட்டி, இந்தியாவை எதிர்கொள்ளும் தைரியத்தைப் பெற்றுள்ளது என விமர்சகர்கள் கூறுகின்றனர். டிரம்ப், "இந்தியா-பாகிஸ்தான் போரை நான் நிறுத்தினேன்" எனக் கூறியபோது, பாகிஸ்தான் தலைவர்கள் உடனடியாக உறுதிப்படுத்தினர். அவருக்கு நோபல் அமைதி பரிசுக்கு பரிந்துரை செய்தனர்.

பிடிஐ கட்சியின் தகவல் செயலர் ஷேக் வக்காஸ் அக்ரம் வெளியிட்ட அறிக்கையில், "இந்த ரகசிய ஒப்பந்தங்கள் தேச இறையாண்மைக்கு எதிரானவை. அரசாங்கம் முழு விவரங்களை நாடாளும் சபைக்கும், மக்களுக்கும் தெரிவிக்க வேண்டும். இது முகலாயர் காலத்தில் வெள்ளையர்களுக்கு துறைமுகங்கள் அளித்ததைப் போன்றது. 

பாகிஸ்தானின் பொருளாதாரத்தை மேலும் சீர்குலைக்கும்" எனக் கண்டித்துள்ளார். கட்சி, அரபிக்கடல் பகுதியில் பாகிஸ்தானின் பாஸ்னி துறைமுகத்தை அமெரிக்காவுக்கு அளிக்கும் திட்டத்தையும் விமர்சித்துள்ளது. இது சீனாவின் குவாடர் துறைமுகத்திற்கு அருகில் உள்ளது, இந்தியாவின் சபஹர் துறைமுகத்திற்கும் அருகில்.

இந்த ஒப்பந்தம், பாகிஸ்தானின் பொருளாதார நெருக்கடியை தீர்க்கும் என அரசு கூறினாலும், சீனாவுடன் ஏற்கனவே கனிம ஒப்பந்தங்கள் இருப்பதால், இரு பெரிய நாடுகளுக்கு தங்களது நாட்டை சுரண்ட அனுமதிப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது. பாகிஸ்தான் மக்கள் இதை 'அமெரிக்காவின் புதிய காலனித்துவம்' என அழைத்து போராட்டங்களைத் தொடங்கியுள்ளனர். 
இந்தியா, இதை கவனித்து, தனது கனிம வளங்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை வலுப்படுத்த வேண்டும் என நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். டிரம்பின் இந்த 'கனிம கொள்கை, உக்ரைன், இஸ்ரேல் போன்றவற்றிலும் பயன்படுத்தப்படுவதாக தெரிகிறது.

இதையும் படிங்க: விஜயை ஒரு நைட் ஜெயிலில் வைத்தால்... தமிழ்நாடு அரசுக்கு சவால் விட்ட அண்ணாமலை...! 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share