×
 

நோபல் பரிசு கிடைக்கலையே! அமைதி பத்தி எனக்கென்ன கவலை! சுயரூபத்தை காட்ட் ஆரம்பித்த ட்ரம்ப்!! போர் பதற்றம்!

அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்காத விரக்தியில், “அமைதி பற்றி மட்டுமே சிந்திக்க வேண்டிய அவசியம் எனக்கு இனி இல்லை,” என, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், நார்வே பிரதமர் ஜோனஸ் கர் ஸ்டோருக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்காத விரக்தியில் நார்வே பிரதமர் ஜோனஸ் கர் ஸ்டோருக்கு எழுதிய கடிதம் உலக அளவில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

இந்தியா-பாகிஸ்தான் உள்ளிட்ட 8 உலகப் போர்களை தடுத்து அமைதி ஏற்படுத்தியதாக டிரம்ப் தொடர்ந்து கூறி வரும் நிலையில், நோபல் பரிசு வெனிசுலா தலைவருக்கு வழங்கப்பட்டது அவருக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

டிரம்ப் தனது கடிதத்தில், "அமைதி பற்றி மட்டுமே சிந்திக்க வேண்டிய அவசியம் எனக்கு இனி இல்லை. இருப்பினும், என் முதன்மையான முன்னுரிமை அமைதிக்கானதாகவே இருக்கும். தற்போது அமெரிக்காவுக்கு என்ன நல்லது, சரியானது என்பது பற்றி சிந்திக்க நேரம் கிடைத்துள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: நோபல் பரிசை பகிர முடியாது!! ட்ரம்புக்கு ஐஸ் வைத்த வெனிசுலா தலைவருக்கு எதிர்ப்பு!

கடந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலா தலைவரான மரியா கொரினா மச்சாடோவுக்கு அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே, அமெரிக்க ராணுவம் வெனிசுலாவில் அதிரடியாக நுழைந்து, போதைப்பொருள் கடத்தலுக்கு உதவியதாக அந்நாட்டு அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா புளோராவை கைது செய்து அமெரிக்க சிறையில் அடைத்தது. இதைத் தொடர்ந்து, துணை அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் இடைக்கால அதிபராக பொறுப்பேற்றார்.

மச்சாடோ, தங்கள் நாட்டுக்கு சுதந்திரம் வாங்கித் தந்ததாக கூறி, தனக்கு வழங்கப்பட்ட நோபல் பரிசை டிரம்புக்கு வழங்கினார். இதை டிரம்ப் "பரஸ்பர மரியாதை" என்று பாராட்டினார். ஆனால் நோபல் பரிசு குழு இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. "நோபல் பரிசு கைமாற்றப்பட்டாலும், அந்த பட்டம் அறிவிக்கப்பட்டவருக்கு மட்டுமே சொந்தமானது – வேறொருவருக்கு மாற்ற முடியாது" என்று கூறியுள்ளது.

டிரம்பின் இந்த கடிதம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. அமைதி நோபல் பரிசு கிடைக்காத விரக்தி அவரை எந்த அளவு பாதித்துள்ளது என்பது இதிலிருந்து தெரிகிறது. உலக தலைவர்கள் இதை எப்படி பார்க்கிறார்கள்? டிரம்பின் அடுத்த நகர்வு என்ன? என்பது தற்போது எதிர்பார்ப்பாக உள்ளது.

இதையும் படிங்க: ஒபாமா ஒண்ணுமே பண்ணல!! நான் 8 போரை நிறுத்தி இருக்கேன்! நோபலுக்கு என்னை விட தகுதியானவங்க யாரு?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share