×
 

தவெக தலைமையில் 3வது கூட்டணி... NDA- வுக்கு பின்னடைவு... டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி...!

திருப்பூரில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பேட்டி அளித்தார்.

தமிழக வெற்றிக்கழகம் தற்போது தமிழக அரசியலில் புதிய அலை என்று அழைக்கப்படுகிறது. விஜய் மாற்று சக்தியாக அமைவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் வருகையால் எந்த தாக்கமும் ஏற்படாது என சிலர் கூறிவரும் நிலையில் விஜய் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்துவார் என கூறப்பட்டு வருகிறது.

குறிப்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விஜயால் தாக்கம் ஏற்படும் என்றும் கூறியிருந்தார். தமிழக வெற்றிக் கழகத்தில் சமீபத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இணைந்தார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கூட தமிழக வெற்றி கழகத்தோடு கூட்டணி அமைக்கலாம் என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது.

கூட்டணி குறித்து விரைவில் அறிவிப்பேன் என டிடிவி தினகரன் தெரிவித்திருந்தார். இதற்கிடையில், திருப்பூரில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். தமிழக வெற்றி கழகத்தின் தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையலாம் என்று தெரிவித்தார். தவெக தலைமையில் கூட்டணி அமைந்தால் NDA 3வது இடத்திற்கு தள்ளப்படும் வாய்ப்பு இருக்கிறது என்றும் அவர் கூறினார்.

இதையும் படிங்க: 2026 தேர்தல் கூட்டணி... இரவோடு இரவாக அதிரடி அறிவிப்பு... திடீர் ட்விஸ்ட் கொடுத்த டிடிவி தினகரன்...!

NDA கூட்டணியில் இருந்து சில கட்சிகள் பிளவுபட்டு இருக்கிறது என கூறியுள்ளார். எடப்பாடி பழனிச்சாமி மீதான வருடத்தில் இதனை கூறவில்லை என்றும் எதார்த்தத்தை கூறுவதாகவும் தெரிவித்தார். சீமான் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார் என்றும் கூறினார். எனவே தமிழக அரசியலில் நான்கு முறை போட்டி நிலவும் என்று கூறிய அவர், என் டி ஏ கூட்டணி மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளார். 

இதையும் படிங்க: இபிஎஸ் ஆட்சி அமைந்தால் மெட்ரோ வருமா? அப்படி என்ன காழ்ப்புணர்ச்சி... விளாசிய டிடிவி தினகரன்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share