×
 

#BREAKING: அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு... TTV தினகரன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 234 தொகுதிகளில் அதிமுக 169 தொகுதிகளில் தனது சின்னத்தில் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 65 தொகுதிகள் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த ஒப்பந்தம் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், பாஜக மேலிடப் பொறுப்பாளரும் மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல் முன்னிலையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் கையெழுத்தானது.

இந்தப் பங்கீட்டில் பாஜகவுக்கு 27 தொகுதிகள், அன்புமணி ராமதாஸ் தலைமையிலான பாமகவுக்கு 18 தொகுதிகள், டி.டி.வி. தினகரன் தலைமையிலான அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும், தமிழ் மாநில காங்கிரஸுக்கு 5 தொகுதிகள், இந்திய ஜனநாயகக் கட்சிக்கு 2 தொகுதிகள், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்துக்கு 1 தொகுதி, புரட்சி பாரதம் கட்சிக்கு 1 தொகுதி என சிறிய கட்சிகளுக்கும் இடங்கள் வழங்கப்பட்டுள்ளன. 

பெரியகுளம் (தனி), மன்னார்குடி, திருவையாறு, காரைக்குடி, திருப்பத்தூர், நான்குநேரி, ஓட்டப்பிடாரம் (தனி), திருச்சி மேற்கு, சைதாப்பேட்டை, பூவிருந்தவல்லி (தனி), மடத்துக்குளம் ஆகிய தொகுதிகள் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு ஒதுக்கப்பட்டு உள்ளன. தொகுதி பங்கீடு நிறைவடைந்த நிலையில், எந்தெந்த போட்டிகளில் யார் வேட்பாளர் என்பது அறிவிக்கப்பட்டுள்ளது. 11 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டார். வேட்பாளர்கள் விவரம் பின்வருமாறு; 

இதையும் படிங்க: போட்ரா வெடிய... HOTSPOT ஆன பெரம்பூர் தொகுதி..!! விஜய் வேட்பு மனுத் தாக்கல்..!!

மடத்துக்குளம் - சண்முகவேலு 

திருச்சி மேற்கு - தொட்டியம் ராஜசேகர்

சைதாப்பேட்டை - செந்தமிழன் 

பெரியகுளம் - டாக்டர் கதிர் காமு

நாங்குநேரி - இசக்கிமுத்து 

ஓட்டப்பிடாரம் - சுந்தரராஜன் 

திருப்பத்தூர் - ஞானசேகரன் 

மன்னார்குடி - காமராஜ் 

திருவையாறு - கார்த்திகேயன் 

காரைக்குடி - தேர் போகி பாண்டி

பூவிருந்தவல்லி - ஏழுமலை. 

இதையும் படிங்க: 15 வருஷமா என் நிலைமையும் அதே தான்... விஜய்க்கு ஆதரவாக சீமான் கருத்து..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share