×
 
☰

குடிநீர் TO தூய்மைப் பணி வரை..! தவெக ஆட்சியா.? தனியாரின் ஆட்சியா.? TTV தினகரன் சரமாரி கேள்வி..!!

தவெக ஆட்சியா அல்லது தனியாரின் ஆட்சியா என ttv தினகரன் கேள்வி எழுப்பினார்.

மதுரை மற்றும் நாகர்கோவில் மாநகராட்சிகளில் பாதாளச் சாக்கடைத் திட்டத்தை தனியாருக்கு தாரைவார்க்கும் முயற்சிக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நடப்பது திமுக ஆட்சியா அல்லது தனியார்களின் ஆட்சியா என்ற கேள்வியை எழுப்பிய அவர், இந்த முடிவை உடனடியாக கைவிட வேண்டும் என அரசை வலியுறுத்தியுள்ளார். மதுரை மற்றும் நாகர்கோவில் ஆகிய இரண்டு மாநகராட்சிகளில் பாதாளச் சாக்கடைத் திட்டங்களை தனியார் பங்களிப்புடன் செயல்படுத்த நகராட்சி நிர்வாகத்துறை முடிவு செய்திருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

அதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்வதற்கான ஒப்பந்தப்புள்ளியை அறிவித்திருப்பது பொதுமக்களின் நலனுக்கு எதிரானது என அவர் குறிப்பிட்டார்.பொதுமக்களின் சுகாதாரம், வாழ்வாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் நேரடியாக தொடர்புடைய பாதாளச் சாக்கடைத் திட்டத்தை முறைப்படி செயல்படுத்த வேண்டிய பொறுப்பு அரசு நிர்வாகத்திற்கு உரியது. அதனை தனியாருக்கு தாரைவார்க்க முனைவது கடும் கண்டனத்திற்குரியது என தினகரன் தெரிவித்தார்.

ஏற்கனவே மாநகராட்சிகளில் குடிநீர் வழங்கல் தொடங்கி தூய்மைப் பணிகள் வரை ஒன்றன் பின் ஒன்றாக பல்வேறு பணிகள் தனியாருக்கு ஒப்படைக்கப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டினார். பல்வேறு பகுதிகளில் தனியார் நிறுவனங்கள் பணிகளை முறையாக செயல்படுத்தவில்லை என்ற தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், அவற்றைக் கருத்தில் கொள்ளாமல் பாதாளச் சாக்கடைத் திட்டத்தையும் தனியார் வசம் ஒப்படைப்பது சரியல்ல என அவர் வலியுறுத்தினார். இதனால் தமிழகத்தில் நடப்பது திமுக ஆட்சியா அல்லது தனியார்களின் ஆட்சியா என்ற கேள்வி எழுகிறது என அவர் கேள்வி எழுப்பினார்.மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மக்களின் நலன்களுக்கும் அடிப்படை உரிமைகளுக்கும் செயல்பட வேண்டும்.

இதையும் படிங்க: தனியாருக்கு கொடுக்க விஜய்க்கு எவ்வளவு ஆர்வம்..? தவெக அரசு முடிவுக்கு TTV தினகரன் எதிர்ப்பு..!

அனைத்து திட்டங்களையும் தனியாருக்கு தாரைவார்க்கக் கூடாது என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என தினகரன் வலியுறுத்தினார். மதுரை மற்றும் நாகர்கோவில் மாநகராட்சிகளில் பாதாளச் சாக்கடைத் திட்டத்தை தனியார் வசம் ஒப்படைக்கும் முடிவை உடனடியாக கைவிட வேண்டும் என திமுக அரசையும் முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களையும் அவர் கேட்டுக்கொண்டார்.பொதுப்பணிகள் மக்கள் நலனுக்காக அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இருப்பது அவசியம் என்பதை வலியுறுத்திய அவர், தனியார்மயமாக்கல் போக்கு தொடர்ந்தால் மக்களின் அடிப்படை வசதிகளும் பாதிக்கப்படும் என எச்சரித்தார். சுகாதாரம் சார்ந்த திட்டங்களில் அரசின் பொறுப்பு முக்கியம் வாய்ந்தது என்பதை அரசு உணர வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

 

இதையும் படிங்க: கட்சி நிர்வாகிகளுக்கு மட்டும் காம்ப்ரமைஸ் ஆகுவிங்களா CM..? பாலியல் குற்றம்... பொளந்து கட்டிய TTV தினகரன்.!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share