×
 

பாகிஸ்தானை கைவிட்ட துருக்கி… இஸ்லாமாபாத் & லாகூருக்கான அனைத்து விமானங்களும் ரத்து!!

இந்தியாவுடனான பதற்றம் காரணமாக பாகிஸ்தானுக்கான அனைத்து விமானங்களை துருக்கி நிறுத்தியுள்ளது.

காஷ்மீரில் கடந்த 22 ஆம் தேதி பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அங்கு இருந்த சுற்றுலாப் பயணிகள் சுமார் 26 பேர் கொல்லப்பட்டனர். மேலும், பலர் காயமடைந்தனர். இதை அடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடியான முடிவுகள் எடுக்கப்பட்டன.  பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி தருவது தொடர்பாக அனைத்து முடிவுகளையும் எடுக்க ராணுவத்திற்குப் பிரதமர் முழுச் சுதந்திரத்தை அளித்திருந்தார். இதனால் இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வந்தது. இந்த சூழலில் இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலில் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டது. இந்த தாக்குதலில் இதில் 100 பயங்கரவாதிகள் வரை கொல்லப்பட்டனர். இந்த நிலையில் பாகிஸ்தான் இந்தியாவில் 15 முக்கிய நகரங்களை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்த திட்டமிட்டது. இந்த ஏவுகணை தாக்குதல்களை இந்திய பாதுகாப்பு படை முறியடித்துள்ளது. இதையடுத்து மீண்டும் நம் நாடு பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க தொடங்கி உள்ளது. அதன்படி சீனா தயாரிப்பான எச்க்யூ 9 ஏவுகணை தடுப்பு சிஸ்டம் பாகிஸ்தானின் லாகூரில் நிறுவப்பட்டு இருந்தது. இதனை இஸ்ரேல் நாட்டின் தயாரிக்கப்பட்ட HAROP ட்ரோன்கள் மூலம் தாக்கி அழிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: இந்தியா பதற்றத்தை அதிகரிக்காது.. பாகிஸ்தான் தாக்கினால் சும்மா விடமாட்டோம்.. ஜெய்சங்கர் எச்சரிக்கை!!

இந்த தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் காயமடைந்தனர்.  இதை அடுத்து இந்தியாவும் பாகிஸ்தானின் பல்வேறு இடங்களில் ட்ரோன் தாக்குதலை நம் நாடு மேற்கொண்டு வருகிறது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தானுக்கான அனைத்து விமானங்களை துருக்கி நிறுத்தியுள்ளது. துருக்கி அரசுக்கு சொந்தமான விமான நிறுவனமான துருக்கிய ஏர்லைன்ஸ், பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தானின் மிக முக்கியமான நகரங்களான இஸ்லாமாபாத் மற்றும் லாகூருக்கான அனைத்து விமானங்களையும் நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.

மேலும் இஸ்லாமாபாத், லாகூர் அல்லது கராச்சிக்கு டிக்கெட் வாங்கிய பயணிகள், மே 7 முதல் 9 வரையிலான விமானங்களுக்கான முன்பதிவுகளை கூடுதல் கட்டணம் இல்லாமல் மாற்றிக்கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மே 21 ஆம் தேதிக்கு முன் மாற்றங்கள் செய்யப்பட்டால் ஜூலை 31  ஆம் வரை அபராதம் அல்லது கூடுதல் கட்டணம் இல்லாமல்  பயணிக்கலாம் என்றும் பயணம் ரத்து செய்யப்பட்டால் பயணிகள் செலுத்திய முழுத் தொகையையும் திருப்பி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பாக்., போட்ட ஒரே ஒரு போன் கால்... இந்தியாவை நோக்கி அலை அலையாய் படையெடுக்கும் துருக்கி கப்பல்கள்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share