தூத்துக்குடியில் பரபரப்பு... கல்லூரியில் வெடித்த நாட்டு வெடிகுண்டு! மாணவர்கள் படுகாயம்..!
தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் இரண்டு மாணவர்கள் காயமடைந்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 1300க்கும் மேற்பட்டோர் பயின்று வருகின்றனர். இந்த கல்லூரியில் தூத்துக்குடி மாவட்டம் பாலாஜி நகரை சேர்ந்த 17 வயது மாணவன் மெக்கானிக்கல் முதலாம் ஆண்டு பயின்று வருகிறார்.
இவரது நண்பனின் தந்தை நாட்டு வெடிகுண்டு தயாரித்து உள்ளதாக கூறப்படுகிறது. அதனை தனது பேக்கில் வைத்துக் கொண்டு கல்லூரிக்கு எடுத்து வந்துள்ளதாக தெரிகிறது.
அந்த நாட்டு வெடிகுண்டின் திரியை மாணவர்கள் எழுத்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து பயங்கர சத்தத்துடன் நாட்டு வெடிகுண்டு வெடித்துள்ளது. இதில் இரண்டு மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். ஒரு மாணவனின் கை முற்றிலும் சிதைந்தது. மற்றொரு மாணவனுக்கு கண்ணில் காயம் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தூத்துக்குடியில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு.. 4 ஸ்பெஷல் அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர்..!
இரண்டு மாணவர்களும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர் அங்கு அவர்களுக்கு தீவர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாலிடெக்னிக் கல்லூரியில் நாட்டு வெடிகுண்டு வெடித்த சம்பவத்தில் இரண்டு மாணவர்கள் காயமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: தமிழக தொழில் வளர்ச்சியில் புதிய மைல்கல்... முதல் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலையை தொடங்கிய முதல்வர்!
நாட்டு வெடிகுண்டு என்பது பொதுவாக உள்ளூர் முறைகளில், எளிய பொருட்களைப் பயன்படுத்தி கையால் தயாரிக்கப்படும் வெடிக்கும் சாதனமாகும். இது முறையான இராணுவ வெடிகுண்டுகளிலிருந்து வேறுபட்டு, பெரும்பாலும் சட்டவிரோதமாகவோ அல்லது குறைந்த அளவிலான தொழில்நுட்பத்துடனோ உருவாக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.