×
 

மீண்டும் ஒரு காவல் மரணம்..? 26 வயது இளைஞர் பலி..! உறவினர்கள் போராட்டம்.!

தூத்துக்குடியில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட 26 வயது இளைஞர் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படும் நபர்கள் உயிரிழக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜெயராஜ், பென்னிக்ஸ், அஜித்குமார், சபரிவர்மன் என பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. அதற்குள் மேலும் ஒரு காவல் மரணம் நிகழ்ந்திருப்பதாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம் தெம்பாக்கம் காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்ற இளைஞர் உயிரிழந்த நிலையில் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் 26 வயதான அருணாச்சலம். சட்டவிரோதமாக மது விற்றதாக 120 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீஸ் இளைஞர் அருணாச்சலத்தை ஜூலை 17ஆம் தேதி கைது செய்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அருணாச்சலத்தின் தலை, கால் பகுதிகளில் படுகாயத்துடன் தூத்துக்குடி அரசு மருத்துவமனைகள் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்த நிலையில் அருணாச்சலம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். காவல்துறையினர் அருணாச்சலத்தை அடித்தே கொன்று விட்டதாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதையும் படிங்க: அரசு மருத்துவர் தற்கொலை..? மன உளைச்சலா..? தூத்துக்குடியில் பரபரப்பு..!

உயிரிழந்த அருணாச்சலத்தின் உடலில் போலீசார் தாக்கியதற்கான காயங்கள் இருந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. 26 வயதான இளைஞர் அருணாச்சலம் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே விசாரணை கைதிகள் உயிரிழந்து வரும் சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ள நிலையில் மேலும் ஒரு காவல் நிலையம் மரணம் நிகழ்ந்துள்ளதா என்ற கேள்வியை இந்த சம்பவம் எழுப்பி உள்ளது. 

இதையும் படிங்க: சபரிவர்மன் மரணத்தில் மவுனம்... "கோழை முதல்வர்"...! திமுக காட்டம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share