முறையா பாதுகாப்பு இல்ல.. காவல்துறை அலட்சியம்..!! தேர்தல் அதிகாரியிடம் தவெக புகார் மனு..!!
தமிழக வெற்றி கழக கூட்டத்தில் மது பாட்டில் வீசப்பட்ட சம்பவத்தை அடுத்து தேர்தல் ஆணையத்தில் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றி கழகத்தின் பொதுக்கூட்டத்தில் மது பாட்டில் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னையின் வில்லிவாக்கம் பகுதியில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில், கட்சியின் வேட்பாளரான ஆதவ் அர்ஜுனா தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட தலைவர்கள் பேசிக் கொண்டிருந்த வேளையில், அருகிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து ஒரு மது பாட்டில் கூட்டத்தினர் நடுவே வீசப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
குறிப்பாக, பெண்கள் மீது உடைந்த மது பாட்டில்கள் விழுந்ததாகவும், ஒரு பெண் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நடைபெற்ற உடனேயே, மேடையில் இருந்த ஆதவ் அர்ஜுனா கடும் கோபத்துடன் பேசினார். குற்றவாளிகளை காவல்துறை உடனடியாக கண்டுபிடிக்கும் வரை தான் அங்கிருந்து நகரமாட்டேன் என்று அறிவித்தார்.
இதனால் கூட்டத்தில் பதற்றம் அதிகரித்தது. காவல்துறை உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து விசாரணையைத் தொடங்கியது. இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களுக்கு 15 நாட்கள் சிறை தண்டனை விதித்து ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜயின் பிரச்சாரம் மற்றும் பொதுக் கூட்டங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து தமிழக வெற்றி கழகத்தால் முன் வைக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: தவெக வேட்பாளர் பட்டியலில் மாற்றம்..? விஜய் எடுக்கும் அதிரடி முடிவு..! பெரும் எதிர்பார்ப்பு..!!
இந்த நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் பொதுக்கூட்டத்தில் மது பாட்டில் வீசப்பட்ட சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தமிழக வெற்றி கழகத்தினர் கொந்தளித்து உள்ளனர். தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கை சந்தித்து தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் புகார் மனு கொடுத்தனர். பாதுகாப்பு குறைபாடுகளை சரி செய்ய வேண்டும் என்றும் பொதுக்கூட்டத்தில் நடந்த மதுபாட்டில் வீச்சு சம்பவத்தை சுட்டிக்காட்டியும் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா ஆகியோரும் புகார் கொடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: ஆதவ் அர்ஜுனா பொது கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு... நடந்தது என்ன..? போலீசார் விளக்கம்..!!