×
 

ஒரு கரூர் துயரம் போதும்... விஜய் மீது ஏன் CASE போட்டீங்க..! கொந்தளித்த ஆதவ் அர்ஜுனா..!!

விஜய் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது குறித்து ஆதவ் அர்ஜுனா கருத்து தெரிவித்தார்.

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் நேற்று பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்காக தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அதைத்தொடர்ந்து பெரம்பூர் சட்டமன்ற தொகுதியிலேயே தனது பிரச்சாரத்தை தொடங்கினார். மக்கள் மத்தியில் உரையாற்றிய அவர் விசில் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்றும் திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் எனவும் கூறினார். இதைத்தொடர்ந்து கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் பரப்புரை மேற்கொண்டார்.

இரண்டு நிமிடங்களில் தனது உரையை போலீசாரின் அறிவுரையை ஏற்று முடித்துக் கொண்டார். இருப்பினும் அதிக அளவில் கூட்டம் கூடியதாகவும் பல்வேறு காரணங்களை கூறியும் விஜய் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது அத்துமீறியதாக கூறி தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கொளத்தூர் தொகுதியில் உரிய பாதுகாப்பு வழங்கப்படாததால் விஜயின் வில்லிவாக்கம் தொகுதி பரப்புரை ரத்து செய்யப்படுவதாக உடனடியாக அறிவிக்கப்பட்டிருந்தது.

பெரம்பூர் மற்றும் கொளத்தூர் தொகுதியில் போதிய பாதுகாப்பு வழங்காதது குறித்து தேர்தல் ஆணையத்திடம் தமிழக வெற்றிக் கழகம் புகார் கொடுத்துள்ளது. விஜயின் வில்லிவாக்கம் தொகுதியில் நடக்க இருந்த பரப்புரை ரத்து செய்யப்பட்ட நிலையில் அந்த தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, மக்களுடைய உயிரை பணயம் வைத்து மற்ற கட்சிகள் மீது பழி போட்டு செய்யும் அரசியல் நிறுத்தப்பட வேண்டும் என்று கூறினார்.

இதையும் படிங்க: விஜயின் பெரம்பூர் பரப்புரை... தவெக நிர்வாகிகள் மீது பாய்ந்த வழக்கு..!! அதிரடி நடவடிக்கை..!!

கரூரில் 41 உயிர்கள் போனது போதும் என்றும் கொளத்தூர் தொகுதியில் போலீசாரை முடக்க என்ன காரணம் என்றும் கேட்டார். விஜய் மீது வழக்குப்பதிவு செய்தது ஏன் என்று கேள்வி எழுப்பிய அவர், 50 ஆண்டுகால அரசியல் கட்சி என்று கூறிக் கொள்கிறார்கள் எனவும் தெரிவித்தார். விஜய் மீது வழக்கு பதிவு செய்ததால் ஆதவ் அர்ஜுனா தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

இதையும் படிங்க: #BREAKING விடிந்ததுமே விஜய்க்கு அதிர்ச்சி ... தவெக தலைவர் மீது பாய்ந்தது 5 வழக்குகள்... இரண்டே நிமிடத்தில் தலைகீழாக மாறிய களம்...!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share