×
 
☰

தவெக தாவிய மாஜி அதிமுக எம்.எல்.ஏ-க்களுக்கு செக்?! மீண்டும் சீட் கிடையாது? வேறு ஆஃபர் வழங்கும் விஜய்!

அதிமுக சார்பில் வெற்றி பெற்ற ஆறு எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர்.

சென்னை: அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கு இடைத்தேர்தலில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்குவதற்குப் பதிலாக, வாரியத் தலைவர் பதவிகளை வழங்க கட்சித் தலைமை திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், மீண்டும் சட்டப்பேரவை உறுப்பினராக வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கும் சில முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளிடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திருச்சி கிழக்கு, சென்னை பெரம்பூர் ஆகிய இரு தொகுதிகளில் வெற்றி பெற்ற தவெக தலைவர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். இதனுடன், அதிமுக சார்பில் வெற்றி பெற்ற ஆறு எம்.எல்.ஏ.க்களும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர்.

மதுராந்தகம் தொகுதியைச் சேர்ந்த மரகதம் குமரவேல், தாராபுரம் சத்யபாமா, பெருந்துறை ஜெயக்குமார், விராலிமலை சி. விஜயபாஸ்கர், கரூர் எம்.ஆர். விஜயபாஸ்கர், அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையா ஆகியோர் பதவியை ராஜினாமா செய்தவர்களில் அடங்குவர். இதனால் மொத்தம் ஏழு தொகுதிகள் காலியாகின.

இதையும் படிங்க: விஜய் போட்டியிட்ட இடத்தில் நானா?... திருச்சி கிழக்கில் களமிறங்குவது குறித்து திருமா. கொடுத்த விளக்கம்...!

இந்தத் தொகுதிகளில் இடைத்தேர்தலை எதிர்கொள்வது தவெகவுக்கு அரசியல் ரீதியாக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ஏற்கெனவே நடைபெற்ற இடைத்தேர்தல்களில், பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்களையே மீண்டும் வேட்பாளர்களாக நிறுத்தியதால், அவர்களுக்காக முதல்வர் விஜய் தீவிரப் பிரசாரம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால், மற்ற தொகுதிகளிலும் இதே நடைமுறையைப் பின்பற்றுவது குறித்து கட்சித் தலைமை ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மீதமுள்ள தொகுதிகளில் வேட்பாளர் தேர்வு தொடர்பாக ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகவும், சிலருக்கு வாரியத் தலைவர் பதவிகளை வழங்கும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் மூலம் கட்சிப் பணிகளிலும் நிர்வாகப் பொறுப்புகளிலும் அவர்களைத் தொடர்ந்து ஈடுபடுத்தத் திட்டமிடப்படுவதாகத் தெரிகிறது.

ஆனால், சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர், இசக்கி சுப்பையா உள்ளிட்ட சிலர் மீண்டும் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆக விரும்புவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களுடன் அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

இருப்பினும், வாரியத் தலைவர் பதவி வழங்குவது குறித்த இறுதி முடிவு மற்றும் இடைத்தேர்தல் வேட்பாளர் பட்டியல் தொடர்பாக தவெக தலைமையிடமிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வேண்டியுள்ளது.

இதையும் படிங்க: "அதான் தவெக அரசு"..! தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை..! அமைச்சர் நிர்மல் குமார் உறுதி.!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share