நீ அரியணை ஏறும் நாள் வரும்… வானமே எல்லை! விஜயின் தாயார் ஷோபா உருக்கம்..!
தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு இன்று பிரம்மாண்டமாக நடைபெறும் நிலையில் நீ அரியணை ஏறும் நாள் வரும் என விஜய்யின் தாயார் ஷோபா மிகவும் உருக்கமாக கூறியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம், தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் புதிய அத்தியாயமாக உருவெடுத்து, மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்து வரும் ஒரு அரசியல் கட்சி. இதன் முதல் மாநில மாநாடு 2024 அக்டோபர் 27 அன்று விழுப்புரம் மாவட்டத்தின் விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த மாநாடு, தமிழக அரசியல் களத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்தது. இந்நிலையில், தற்போது இக்கட்சியின் இரண்டாவது மாநில மாநாடு இன்று மதுரையில் மிக பிரம்மாண்டமாக நடைபெறுகிறது.
மாநாட்டிற்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விக்கிரவாண்டியில் ஏற்பட்ட குறைபாடுகள் ஏதும் இங்கு நடைபெறக் கூடாது என்பதில் கவனம் செலுத்தும் வகையில் ஏற்பாடுகள் இருந்தன. விஜய் நடந்த சென்று தொண்டர்களை சந்திக்கும் வகையில் ரேம்வாக் நடைமேடை அமைக்கப்பட்டுள்ளது. மாநாட்டை முன்னிட்டு 500 ஏக்கரில் பிரம்மாண்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அலை அலையாய் தொண்டர்கள் குவிய தொடங்கினர். அரசியலில் விஜய் புதிய அத்தியாயத்தை மேற்கொள்ள வேண்டும் என்பதே அவரது ஆதரவாளர்களின் எண்ணம். இந்த நிலையில், தனது மகனின் இரண்டாவது மாநில மாநாட்டிற்காக விஜயின் தாயார் ஷோபா மதுரைக்கு வருகை தந்தார்.
இதையும் படிங்க: நான்லாம் பாத்ததுமே எஸ்கேப்! கொடிக்கம்பம் விழுந்ததை நேரில் பார்த்தவர் பரபரப்பு பேட்டி…
விஜய்க்கு தனது உருக்கமான வார்த்தைகளை ஷோபா கூறியுள்ளார். திரையில் உன்னை பார்த்து உயர்த்திய தாய்மார்கள், தம்பி தங்கைகள் அரசியில் வெற்றிக்கு துணை நிற்கட்டும் என்றும் வரவிருக்கும் தேர்தல் உன் இமாலய வெற்றியை காட்டும், நீ அரியணை ஏறும் நாள் வரும் எனவும் அது உன் தொண்டர்களின் திருநாள் என்றும் கூறியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் தடைகளை வெல்லும் கழகம் என்று காட்டு, நேர்மையான தலைவன் என்பதற்கு நீதான் எடுத்துக்காட்டு என்று பெருமிதம் தெரிவித்தார். உன்னோடு வரும் தொண்டர் படை இந்த நாட்டில் வேறு யாருக்கும் இல்லை எனக் கூறிய ஷோபா, உன் வெற்றிக்கு வானமே எல்லை, வாழ்த்துகள் விஜய் என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: #BREAKING: விஜய் மாநாட்டின் 100 அடி கொடிக்கம்பம் சாய்ந்து விபத்து… அப்பளம் போல் நொறுங்கிய கார்!