×
 

"Not Reachable"-ல் விஜய்!! கைமாறும் பவர் செண்டர்!! தவிக்கும் தவெக தொண்டர்கள்!!

கூட்டணி, ஆள் சேர்ப்பு என, தமிழக அரசியல் களம் சூடு பிடித்திருக்கும் நிலையில், த.வெ.க., மொத்தமும் முடங்கி கிடப்பதாக அக்கட்சி நிர்வாகிகள் சொல்கின்றனர்.

சென்னை: தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு சூடுபிடித்திருக்கும் நிலையில், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) மிகுந்த சிக்கலில் சிக்கியுள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தாமல், ஆள் சேர்ப்பும் முடங்கியுள்ளதாக கட்சி நிர்வாகிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இதனால் தேர்தல் களத்தில் இருந்தே வெளியேறும் அபாயம் உள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் கவலை தெரிவிக்கின்றன.

த.வெ.க.வில் முன்னாள் அதிமுக அமைச்சர் வைத்திலிங்கம் தரப்பை கூட்டணியாக இணைக்க முயற்சி நடத்திய அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், அது நடக்காததால் திமுகவில் இணைந்துவிட்டார். கட்சியின் மொத்த கட்டுப்பாடும் விஜயின் வியூக வகுப்பாளரான ஜான் ஆரோக்கியசாமி கையில் இருப்பதால், அவரது விருப்பத்திற்கேற்பவே எல்லாமே நடக்கிறது என்று நிர்வாகிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

மெகா கூட்டணியுடன் தேர்தலை சந்தித்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்பது பெரும்பாலான நிர்வாகிகளின் கருத்து. ஆனால் ஜான் ஆரோக்கியசாமி விஜயை தனித்து போட்டியிட வைக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார். 

இதையும் படிங்க: டெல்லியில் இருந்து வந்த ஓலை! சிபிஐ வளையத்தில் விஜய்!! 11ம் தேதியே தலைநகருக்கு பயணம்!

அதனால்தான் கூட்டணி ஆட்சி என்ற கோஷத்தை முதலில் முன்வைத்த த.வெ.க.வில் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு குழு கூட அமைக்கப்படவில்லை. ஜான் விரும்பும் ஆட்களைத் தவிர வேறு யாரையும் கட்சியில் சேர்க்க அனுமதி இல்லை.

கூட்டணி சேர காத்திருந்த பலரும் வேறு இடங்களில் 'செட்டில்' ஆகி வருவதால், நிர்வாகிகள் குழம்பிப் போயுள்ளனர். இதற்கிடையே த.வெ.க. தலைவர் விஜயை தொடர்புகொள்ள முடியாத நிலை உள்ளது. கடைசி நேரத்தில் பாஜக கூட்டணியில் தினகரன் இணைந்துவிட்டார்.

தினகரன் த.வெ.க.வுடன் கூட்டணி அமைக்க ஆர்வம் காட்டினார்; விஜய்க்கு ஆதரவாக பல கருத்துகளை தெரிவித்தார். விஜய் வருகையால் அதிமுகவுக்கு மூன்றாம் இடம்தான் கிடைக்கும் என்று கூட ஆருடம் கூறினார். ஆனால் த.வெ.க. தரப்பில் விஜய் முன்னின்று எதுவும் பேசவில்லை. ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போன்ற நிர்வாகிகள் மட்டுமே பேசினர்; சீட் உத்தரவாதம் எதுவும் அளிக்கவில்லை.

தினகரன் விஜயை நேரடியாக சந்திக்க முயற்சித்தும் அனுமதி கிடைக்கவில்லை. பொங்கல் பண்டிகை நேரத்தில் சந்திப்பு நடக்கும் என எதிர்பார்த்தார். ஆனால் விஜய் நடிகை கீர்த்தி சுரேஷ் இல்லத்தில் நடந்த பொங்கல் கொண்டாட்டத்தில் பங்கேற்க வெளியூர் சென்றுவிட்டார்.

அதன்பின் கரூர் சம்பவம் தொடர்பான சிபிஐ விசாரணை, ஜனநாயகன் படம் வெளியீட்டில் பிரச்னை உள்ளிட்ட தொடர் நெருக்கடிகள் விஜயை மன உளைச்சலில் ஆழ்த்தியுள்ளன. இவ்வளவு பிரச்னைகளில் விஜய் உழலும் போது கூட்டணி அமைப்பது சரியல்ல என்று முடிவெடுத்து, தினகரன் அதிமுக-பாஜக கூட்டணியைத் தேர்வு செய்தார்.

தேர்தல் நெருக்கத்தில் விஜய் தொடர்புக்கு அப்பாற்பட்டு இருப்பதால், அவரை நம்பி கூட்டணிக்கு வர முயன்ற பல கட்சித் தலைவர்களும் வெறுத்துப் போயுள்ளனர். த.வெ.க.வின் தேர்தல் பிரசாரக் குழு ஆலோசனைக் கூட்டங்கள் நடந்தாலும், கூட்டணி விவகாரத்தில் தெளிவின்மை தொடர்கிறது. வரும் ஜனவரி 25-ஆம் தேதி மாமல்லபுரத்தில் நடக்கவுள்ள செயல்வீரர்கள் கூட்டத்தில் விஜய் முக்கிய அறிவிப்பு வெளியிடுவாரா என அரசியல் வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.

இந்த நிலை தொடர்ந்தால் த.வெ.க.வின் தேர்தல் வாய்ப்புகள் பெரிதும் பாதிக்கப்படும் என்ற அச்சம் நிர்வாகிகளிடையே நிலவுகிறது.

இதையும் படிங்க: சீனியர் செங்கோட்டையன் மிஸ்ஸிங்!! Why Bro?! தவெக தேர்தல் அறிக்கை குழுவால் சர்ச்சை!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share