×
 

I.N.D.I.A கூட்டணியில் இணையலாம் வாங்க!! தவெக விஜய்க்கு காங்கிரஸ் அழைப்பு! ஓரங்கட்டப்பட்ட திமுக!

டெல்லியில் வரும், 8ம் தேதி நடைபெற உள்ள, I.N.D.I.A கூட்டணியின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க, தமிழக வெற்றிக் கழகத்திற்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், வரும் ஜூன் 8ஆம் தேதி டெல்லியில் நடைபெற உள்ள I.N.D.I.A கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க தமிழக வெற்றிக் கழகத்திற்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவல் தேசிய மற்றும் மாநில அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தது. காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் அரசு அமைந்தது. தேர்தலுக்கு முன்பு தி.மு.க. கூட்டணியில் இருந்த காங்கிரஸ், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு புதிய அரசியல் முடிவை எடுத்து த.வெ.க. அணிக்கு ஆதரவு தெரிவித்தது. இந்த மாற்றம் தமிழக அரசியலில் கூட்டணி சமன்பாடுகளை முற்றிலும் மாற்றியதாகக் கருதப்படுகிறது.

இதன் பின்னர் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் இடையிலான உறவு கடுமையாக பாதிக்கப்பட்டதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. இரு கட்சிகளுக்கும் இடையிலான அரசியல் நெருக்கம் குறைந்ததோடு, தேசிய அரசியல் மேடையிலும் அதன் தாக்கம் பிரதிபலித்ததாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: #BREAKING: தவெக அரசின் அதிரடி மூவ்... தமிழகம் முழுவதும் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்..!! முழு விவரம்..!!

2024 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு உருவாக்கப்பட்ட I.N.D.I.A கூட்டணியில் காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி, ஆம் ஆத்மி, தேசியவாத காங்கிரஸ், தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் மற்றும் பல்வேறு எதிர்க்கட்சிகள் இடம்பெற்றிருந்தன. ஆனால் காலப்போக்கில் கூட்டணிக்குள் பல்வேறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில், டெல்லியில் நடைபெற உள்ள முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில் த.வெ.க. பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில், தி.மு.க.வுக்கு அழைப்பு வழங்கப்படவில்லை என்ற தகவலும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எந்தெந்த கட்சிகள் பங்கேற்கின்றன, த.வெ.க. அழைப்பை ஏற்கிறதா, தேசிய அரசியலில் புதிய கூட்டணி மாற்றங்கள் உருவாகுமா என்பது குறித்து அரசியல் வட்டாரங்கள் தீவிரமாக கவனம் செலுத்தி வருகின்றன. இந்த விவகாரம் அடுத்த சில நாட்களில் தேசிய அரசியலில் முக்கிய விவாதமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: ராஜ்யசபா சீட்டுக்கு முந்தும் காங்கிரஸ்!! விஜய் யோசனை! ப.சிதம்பரத்தை தொடர்ந்து கிரிஷ் சோடங்கரும் அழுத்தம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share