×
 

உன் மனசு போல உருட்டு ராசா... மரைன்- னா மீன்வளமா? FACT CHECK- ஐ கிழித்து தொங்கவிட்ட தவெக…!

விஜய் பொய் குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாக தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்ட விவரங்களை தமிழக வெற்றி கழகம் விமர்சித்துள்ளது.

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தனது தேர்தல் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். கடந்த 13ம் தேதி திருச்சியில் தனது சுற்றுப்பயணத்தை தொடங்கி நடத்தி வருகிறார். நாகையில் விஜய் பிரச்சாரம் நடத்தினார். அப்போது விஜய் பிரச்சாரத்தின் போது பேசியதில் உண்மைக்கு மாறான தகவல்கள் வெளியிட்டதாக கூறப்பட்டது. விஜய் பேசிய விஷயங்களில் மூன்று விவகாரங்களை தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கியது.

கடல்சார் கல்லூரி ஏதும் நாகப்பட்டினத்தில் இல்லை என விஜய் பேசி இருப்பதாகவும்., ஆனால் உண்மை என்னவென்றால் தமிழ்நாடு டாக்டர் ஜெ ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் நாகப்பட்டினத்தில் இயங்கி வருகிறது எனவும் தெரிவித்தது. 

இந்த நிலையில் தமிழக அரசின் தகவல் சரி பார்ப்பகம் கொடுத்த தகவலை தமிழக வெற்றிக் கழகத்தின் ஐடி விங் சரமாரியாக சாட்டியுள்ளது. மேலும் காணொளி ஒன்றையும் பகிர்ந்துள்ளது. விஜய் வைத்த உண்மையான குற்றச்சாட்டுகளை அறிவாலயத்தில் நரிகளை வைத்து பொய் என முதல்வர் ஸ்டாலின் கூற வைப்பதாக குற்றம் சாட்டி உள்ளது. வாரிசுகளுக்கு முதல்வர் நாற்காலியை கொடுப்பதில் கவனம் செலுத்தும் முதல்வருக்கு, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை கொடுப்பதில் எங்கு கவனம் இருக்கப் போகிறது என்றும் கேள்வி எழுப்பியுள்ளது. மீன்வளம் நிறைந்த நாகை மண்ணில் ஒரு மரைன் கல்லூரி கூட இல்லை என்று கேள்வி கேட்டால்., மரைன் கல்லூரி என்றால் என்னவென்று தெரியாத அளவுக்கு தமிழ்நாடு அரசோட TN FACT CHECK செயல்படுகிறது என்று குற்றம் சாட்டியுள்ளது.

இதையும் படிங்க: கால் வெக்குற இடமெல்லாம் கன்னிவெடி… ஜேசிபி மூலம் விஜய்க்கு மாலை… CASE போட்ட போலீஸ்…!

அது மட்டுமல்லாது கடற்படை சார்ந்த படிப்புகளை கொடுப்பதற்கான கல்லூரியை விஜய் சுட்டிக்காட்டியதாகவும், மீன்வளம் சார்ந்த பொறியியல் படிப்புகளுக்கான கல்லூரியை சுட்டிக்காட்டி இரண்டும் ஒன்றுதான் என உருட்டி கொண்டிருப்பதாகவும் குற்றம் சாட்டியது. விஜய் முன்வைத்த கேள்விகளை திசைதிருப்ப TN FACT CHECK-ஐ களமிறக்கி, என்ன வேலை செய்தாலும், உண்மையை யாராலும் மறைக்க முடியாது ஸ்டாலின் சார் என்றும் சாடியுள்ளது.

இதையும் படிங்க: இதையெல்லாம் செய்யக்கூடாது... தொண்டர்களுக்கு தவெக தலைமை ஸ்ட்ரிக்ட் உத்தரவு...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share