புஸ்ஸான புஸ்ஸி ஆனந்த்... தவெகவில் ஓங்கும் செங்கோட்டையன் கை... முக்கிய பொறுப்பை தூக்கிக் கொடுத்த விஜய்...!
தவெக மாவட்ட செயலாளர் கூட்டத்தில் நடந்த முக்கிய விவாதங்கள் தொடர்பான விவரங்கள் வெளியாக இருக்கின்றன.
தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்டம் மற்றும் மாநில நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. பொதுச் செயலாளர் என்.ஆனந்த் தலைமையில் நடைபெற்ற, இந்த கூட்டத்தில், நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ.செங்கோட்டையன், தவெக இணை பொதுச் செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல் குமார், துணை பொதுச் செயலாளர் ராஜ்மோகன், தேர்தல் பிரச்சார மேலாண்மை பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ், பொருளாளர் வெங்கட்ராமன், பரப்புரைச் செயலாளர் நாஞ்சி சம்பத், தேர்தல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி உள்பட மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் விஜய் பங்கேற்பார் என்று எதிர்பார்த்த நிலையில், அவர் பங்கேற்கவில்லை.
விஜய் பங்கேற்காத நிலையில், வழக்கத்திற்கு மாறாக தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்திற்கு பதிலாக செங்கோட்டையன் தான் கூட்டத்தில் முக்கிய தலைமையாக இருந்துள்ளார். இதுவரை நடந்த ஆலோசனை கூட்டத்திலேயே மிக முக்கியமான ஆலோசனை கூட்டமாக நேற்று நடந்த ஆலோசனை கூட்டம் கருதப்படுகிறது. அதற்கு காரணம் மிக முக்கியமான விவாதங்கள் எழுந்ததாகவும், அதன் மூலம் மிக முக்கியமான முடிவுகள் எட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதே சமயத்தில் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தவெக சார்பில் எடுக்கப்பட்ட மேற்கு மண்டல புள்ளி விவரங்களை செங்கோட்டையனிடம் ஒப்படைத்திருக்கிறார்கள். அதாவது செங்கோட்டையன் கட்சியில் இணைந்த பிறகு மேற்கு மண்டல பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார். அதுவும் குறிப்பாக மேற்கு மண்டலத்தில் உள்ள தவெக நிர்வாகிகளுடைய பட்டியலும் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. நான்கு மாவட்டங்களுடைய வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கும் பொறுப்பும் ஒப்படைக்கப்பட்டிருக்கிறதாகவும் அந்த ஆலோசனை கூட்டத்திலே பங்கேற்றவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
நான்கு மாவட்டங்களுக்கான தேர்தல் பணிகளை மேற்பார்வையிடும் பொறுப்பும் செங்கோட்டையனிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. தவெகவில் இணைந்த செங்கோட்டையனுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பும், ஈரோடு, கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்ட பொறுப்பாளர் பதவியும் வழங்கப்பட்டது. . இந்த நிலையில்ஈரோடு மாவட்டத்தில் 8 தொகுதிகளும், கோயம்புத்தூர் மாவட்டத்தில் 10 தொகுதிகளும், திருப்பூரில் 8 தொகுதிகளும் மற்றும் நீலகிரியில் 3 தொகுதிகள் இருக்கின்றன.
இதையும் படிங்க: 2026ல் விஜயை முதல்வர் ஆக்கணும்..! தவெக ஆலோசனைக் கூட்டம் தொடக்கம்...!
எனவே மொத்தமாக 29 தொகுதிகளுக்கான வேட்பாளரை தேர்வு செய்யும் பொறுப்பும் செங்கோட்டையனிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. முக்கியமாக செங்கோட்டையன் நேற்றைய கூட்டத்தில் தமிழக வெற்றி கழகத்தை பலப்படுத்துவது என்னுடைய பொறுப்பு என்றும் பேசியிருக்கிறார். தன் தொடர்ச்சியாகத்தான் ஜனவரி மாதத்திற்குள் அதிருப்தியில் இருக்கும் பிற கட்சியை சார்ந்த முக்கிய தலைவர்களை தமிழக வெற்றி கழகத்தில் இணைக்க போவதாகவும் அவர் உறுதிப்பட தெரிவித்திருக்கிறார். மேலும் மாவட்ட செயலாளர்கள் இனிமேல் எந்த பிரச்சனையாக இருந்தாலும் என்னை தொடர்பு கொள்ளுங்கள் நான் பார்த்து கொள்கிறேன் என்றும் உறுதி அளித்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த சூழலில் தான் நேற்று நடந்த இந்த ஆலோசனை கூட்டம் மிக முக்கியமான ஆலோசனை கூட்டமாகவே தமிழக கட்சி கழகத்தி நிர்வாகிகள் பார்க்கிறார்கள். அதேபோல பதவிக்கு பணம் வாங்கிய மாவட்ட செயலாளர்களுக்கு தமிழக வெற்றிக் கழகத்தினுடைய தலைமை எச்சரிக்கை விடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. கட்சி தொடங்கிய நாளிலிருந்தே மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் மீது பதவிக்கு பணம் பெறுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பதவி வழங்க பணம் வசூல் செய்கிறார், கட்சி கூட்டங்களை பிரம்மாண்ட ஏற்பாடு செய்ய வற்புறுத்துகிறார், காரில் ஊர்வலம் வருவது முதல் அனைத்து செலவுகளையும் மாவட்ட செயலாளர்கள் தலையில் கட்டுகிறார் என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இதையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டு தான், தமிழக வெற்றிக் கழகத்தின் உடைய தலைமை, பணம் வாங்கும் நிலை தொடர்ந்தால் பதவியில் நீடிக்க முடியாது எனவும் எச்சரித்ததாக கூறப்படுகிறது. இதை எல்லாம் மனதில் கொண்டே புஸ்ஸி ஆனந்திற்கான அதிகாரத்தை கட்சியில் குறைக்க விஜய் முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக புதுச்சேரி மக்கள் சந்திப்பில் எதிர்பார்த்த அளவிற்கு கூட்டம் வராதது, முதலமைச்சரை சந்தித்து முறையாக அனுமதி பெற முடியாமல் போனது, பெண் காவல் அதிகாரியிடம் திட்டு வாங்கியது என அடுத்தடுத்த சொதப்பல்களால் புஸ்ஸி ஆனந்த் மீது விஜய் கடும் அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் அவரது அதிகாரத்தை குறைக்க திட்டமிட்டுள்ளதோடு, செங்கோட்டையனுக்கு கூடுதல் பொறுப்புகள் ஒதுக்கபட்டுள்ளதாம்.
தேர்தல் இன்னும் நெருங்கி வரக்கூடிய சூழல்ல வட மாவட்டங்களில் தமிழக கட்சி கழகத்தினுடைய எதிர்காலம் பிரகாசமாக இருப்பதாகவே தவெக எண்ணுகிறது. ஆனால் மேற்கு மண்டலம், கொங்கு மண்டலம் ஆகிய பகுதிகளில் இன்றுவரை கட்சியினுடைய உட்கட்டமைப்புகள் பலம் இல்லாததாகவே உள்ளன. இதனால் தான் செங்கோட்டையனுக்கு கூடுதல் அதிகாரமாக ஈரோடு,கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் உள்ளடங்கிய 29 சட்டமன்ற தொகுதிகளுடைய வேட்பாளர் தேர்வு செய்யும் அதிகாரத்தை தலைமை அளித்திருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஒரு சிறப்பு குழு அமைக்கப்படும் என்றும் ஆலோசனை கூட்டத்தில தீர்மானங்க நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்த குழுவிற்கான தலைமை பொறுப்பும் செங்கோட்டையனுக்குத் தான் வழங்கப்படும் எனக்கூறப்படுகிறது.
இதையும் படிங்க: 2026ல் விஜய் தான் முதலமைச்சர்... புதுவையில் புஸ்ஸி ஆனந்த் உறுதி..!