×
 
☰

காலை உணவு விரிவாக்க தொடக்க விழாவில் மீண்டும் சர்ச்சை... அரசு பள்ளிக்குள் தவெக நிர்வாகிகள் செய்த அட்ராசிட்டி...!

காலை உணவு திட்ட தொடக்க விழாவில் சர்ச்சை. மாணவர்களை கீழே அமர வைத்து நிர்வாகிகள் மேலே அமர்ந்து உணவருந்தியதால் சர்ச்சை

சென்னை திருவான்மியூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்ட பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தமிழக முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு உணவு பரிமாறியதுடன், அவர்களுடன் அமர்ந்து முதலமைச்சர் காலை உணவு அருந்தினார்.

இதனைத் தொடர்ந்து திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியில் நடைபெற்ற காலை உணவுத் திட்ட தொடக்க நிகழ்ச்சியில், திருவாரூர் தாலுக்கா கொரடாச்சேரி ஒன்றிய செயலாளர்கள் சுகந்தன், தமிழ் ஆகியோர் கலந்து கொண்டு திட்டத்தை தொடங்கி வைத்ததாக கூறப்படுகிறது.

அப்போது மாணவர்கள் கீழே அமர்ந்து உணவு அருந்திய நிலையில், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிர்வாகிகள் மேடையில் அமர்ந்து உணவு அருந்தியதாக கூறப்படும் காட்சிகள் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிருப்தியையும், முகம் சுளிக்கும் நிலையும் ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: தமிழகத்தில் தொடரும் கரண்ட் கட்! மின்வாரியத்தில் முதல்வர் விஜய் அதிரடி ஆய்வு! அதிகாரிகளுக்கான உத்தரவு என்ன?

“மாணவர்களுக்காக உருவாக்கப்பட்ட காலை உணவுத் திட்டத்தின் நோக்கம், அவர்களது நலனையும் சமத்துவத்தையும் முன்னிலைப்படுத்துவதாகும். முதலமைச்சர் மாணவர்களுடன் சமமாக அமர்ந்து உணவருந்திய நிலையில், உள்ளூர் தொடக்க நிகழ்ச்சியில் அதற்கு மாறான காட்சி இடம்பெற்றதாக கூறப்படுவது ஏன்?” என்ற கேள்வியும் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

அரசுத் திட்டங்களின் தொடக்க விழாக்களில், மாணவர்களின் கண்ணியத்தையும் சமத்துவத்தையும் கருத்தில் கொண்டு அனைவரும் ஒரே நிலைப்பாட்டில் அமர்ந்து உணவருந்துவது போன்ற முன்னுதாரணமான நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

இதையும் படிங்க: தவெக பிரசாரத்தில் பணப்பட்டுவாடா? “தூய சக்தி”க்கு சிக்கல்? மதுராந்தகம் இடைத்தேர்தலில் தவெகவுக்கு பின்னடைவு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share