×
 
☰

#BREAKING அதிரும் அரசியல் களம்... சென்னையில் இந்தியா கூட்டணி ஆலோசனை... இந்தியா கூட்டணி கூட்டம் - முதல் முறையாக பங்கேற்கும் தவெக...!

தமிழக வெற்றி கழகம் சார்பில் ஆதவ் அர்ஜுனா மற்றும் மரிய வில்சன் ஆகிய இருவரும் பங்கேற்க உள்ளதாக அக்கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் நடைபெற உள்ள இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக வெற்றி கழகம் பங்கேற்கிறது. இந்திய தலைமைத் தேர்தல் ஆணையரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி இந்தியா கூட்டணி சார்பில் ஆலோசனை நடைபெற உள்ள நிலையில், இதில் தமிழக வெற்றி கழகமும் பங்கேற்கிறது.

காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் இன்று காலை 11 மணிக்கு இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் தமிழக வெற்றி கழகமும் பங்கேற்கிறது.

தமிழக வெற்றி கழகம் சார்பில் ஆதவ் அர்ஜுனா மற்றும் மரிய வில்சன் ஆகிய இருவரும் பங்கேற்க உள்ளதாக அக்கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: “அய்யோ... யாரையும் உருவ கேலி பண்ணக்கூடாது...” - திமுக தலைவர் ஸ்டாலினுக்கு செளமியா அன்புமணி அட்வைஸ்..;!

ஏற்கனவே டெல்லியில் சமீபத்தில் இந்தியா கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த தேசியத் தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, தலைமைத் தேர்தல் ஆணையரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி, அக்டோபர் 6ஆம் தேதி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அனைவரும் இணைந்து டெல்லியில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

அதேபோல், நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பும் போராட்டம் நடத்த வேண்டும் என இந்தியா கூட்டணி முடிவு செய்துள்ளது.

இந்த நிலையில், ஒவ்வொரு மாநிலத்திலும் இந்தியா கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், இன்று காலை 11 மணிக்கு சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் மாணிக்கம் தாகூர், வைகோ, திருமாவளவன் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.

இந்தக் கூட்டத்தில்தான் தமிழக வெற்றி கழகமும் பங்கேற்கிறது. அக்கட்சி சார்பில் ஆதவ் அர்ஜுனா மற்றும் மரிய வில்சன் ஆகியோர் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றி கழகம் இந்தியா கூட்டணியில் இடம்பெறுமா என பல்வேறு முறை கேள்வி எழுந்தபோது, காங்கிரஸ் கட்சியின் மாணிக்கம் தாகூர், தமிழக வெற்றி கழகத்துக்கு எம்.பி.க்கள் வந்த பிறகு அக்கட்சி இந்தியா கூட்டணிக்கு வரும் என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், சென்னையில் நடைபெறும் இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக வெற்றி கழகம் பங்கேற்பது அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: சத்யபாமா உருவத்தை கிண்டலடித்த மு.க.ஸ்டாலின் ... தமிழகமே அதிர திருப்பி அடித்த தவெக ஐடி விங்க்... !

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share