கொங்கு மண்டலத்தில் தவெக டெபாசிட் இழக்கும்... இன்னொரு மநீம அவ்ளோ தான்... அர்ஜுன் சம்பத் உறுதி...!
கொங்கு மண்டலத்தில் தமிழக வெற்றி கழகம் டெபாசிட் இழக்கும் என அர்ஜுன் சம்பத் தெரிவித்தார்.
நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கி அரசியல் களத்தில் இறங்கியதில் இருந்து அவரது பொதுக்கூட்டங்களும் மாநாடுகளும் பெரும் கூட்டத்தை ஈர்த்து வருகின்றன. விக்கிரவாண்டி முதல் மாநாடு, மதுரை இரண்டாவது மாநாடு, ஈரோடு, திருச்சி, புதுச்சேரி போன்ற இடங்களில் நடந்த பொதுக்கூட்டங்கள் என அனைத்திலும் லட்சக்கணக்கான மக்கள் திரண்டது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் இந்தக் கூட்டங்கள் அனைத்தும் வெறும் ரசிகர்கள் மட்டுமே என்றும், இது ஓட்டாக மாறாது என்றும் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.
விஜயின் அரசியல் பிரவேசம் தொடங்கிய காலத்திலிருந்தே அவரது ரசிகர் பட்டாளமே அவரது மிகப்பெரிய பலமாகக் கருதப்பட்டது. திரைப்பட வெளியீடுகளின்போது தியேட்டர்களை முற்றுகையிடும் ரசிகர்கள் போலவே அரசியல் கூட்டங்களிலும் அதே உற்சாகத்துடன் திரள்வதைப் பார்க்க முடிந்தது. எம்ஜிஆருக்குப் பிறகு இவ்வளவு பெரிய கூட்டத்தை ஒரு நடிகர் ஈர்ப்பது அரிது என்று பலரும் ஒப்புக்கொண்டாலும், இந்தக் கூட்டம் வெறும் சினிமா ரசிகர்களால் ஆனது என்ற விமர்சனம் தொடர்ந்து எழுந்தது.
குறிப்பாக, திமுக தரப்பில் இருந்து இது போன்ற கருத்துகள் வெளிப்படையாகவே தெரிவிக்கப்பட்டன. கமல் ஹாசன் போன்ற மற்ற நடிகர்-அரசியல்வாதிகள் கூட கூட்டம் ஓட்டாக மாறாது, இது அனைவருக்கும் பொருந்தும் என்று கூறி இந்த விமர்சனத்தை வலுப்படுத்தினர். வைகோ போன்றவர்களும் இந்தக் கூட்டம் நடிகர் என்ற முறையில் வருவதே தவிர, அரசியல் ஆதரவு அல்ல என்று சுட்டிக்காட்டினர். சமீபத்தில் விஜய் ஈரோட்டில் மக்கள் சந்திப்பு நிகழ்த்தினார்.
இதையும் படிங்க: தூய்மை பணியாளர் தற்கொலை.. திமுக நஞ்சுக்கொடி பரவ விடக்கூடாது... நயினார் கடும் கண்டனம்...!
இந்த நிலையில் இந்து மக்கள் கட்சியின் அர்ஜுன் சம்பத் விஜயை விமர்சித்துள்ளார். கொங்கு மண்டலத்தில் உள்ள 70 தொகுதிகளிலும் தவெக டெபாசிட் இழக்கும் என்று தெரிவித்தார். விஜயை பார்க்க வேண்டுமானால் மக்கள் கூடலாம். ஆனால், தவெக இன்னொரு மக்கள் நீதி மய்யமாகவே செயல்படுகிறது என்றும் விமர்சித்தார்.
இதையும் படிங்க: செவிலியர்கள் சாபம் திமுகவை அரியணை ஏற விடாது... ஆணவம் தலைக்கேறிடுச்சு.. நயினார் கண்டனம்...!