×
 

விஜய் பங்கேற்கும் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி..!! கட்சி தலைமை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!

தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் இன்று இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

ரமலான் பண்டிகை என்று பொதுவாக அழைக்கப்படும் ஈதுல் ஃபித்ர் இஸ்லாமிய மதத்தில் மிக முக்கியமான திருநாள்களில் ஒன்றாகும். இது "நோன்பு பெருநாள்" அல்லது "ஈகைத் திருநாள்" என்ற பெயர்களாலும் அறியப்படுகிறது. இந்தப் பெருநாள் புனித ரமலான் மாதம் முழுவதும் நோன்பு நோற்று முடித்த பிறகு கொண்டாடப்படுகிறது. உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்கள் இந்த நாளை மிகுந்த ஆனந்தத்துடனும் ஒற்றுமையுடனும் கொண்டாடுகிறார்கள். இது மத ரீதியாக மட்டுமல்லாமல், சமூக ரீதியாகவும், குடும்ப ரீதியாகவும் மகிழ்ச்சியைப் பகிரும் ஒரு அற்புதமான திருநாளாக விளங்குகிறது. 

இதனிடையே, புனித திருநாளான ரமலான் திருநாளை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் சார்பில் நோன்பு திறப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் இந்த இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 6 மணி முதல் இரவு 9:00 மணி வரை மாமல்லபுரம் ஃபோர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டன் ஹோட்டலில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சி, தேர்தல் ஆணையத்தின் முறையான அனுமதி பெற்று, உள்ளரங்க நிகழ்ச்சியாக நடைபெறுகிறது. மேலும் 1000 பேர் மட்டுமே இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது என்றும் இந்த அழைப்பிதழ் பெற்றிருப்பவர்களைத் தவிர்த்து வேறு யாருக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது

இதையும் படிங்க: கூட்டணிக்கு வராத கோபமா?... ஒரே மேடையில் தவெகவை பொளந்து கட்டிய அண்ணாமலை, வேலுமணி...!

அழைப்பிதழ் இல்லாதவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பதால், அவர்கள் இந்த நிகழ்ச்சியைத் தொலைக்காட்சி நேரலைகளில் கண்டு, அழைப்பிதழ் பெற்றிருப்பவர்கள் மட்டுமே பங்கேற்க முழு ஒத்துழைப்பு தருமாறு தமிழக வெற்றி கழகத்தின் மாநில செயலாளர் ஆனந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதையும் படிங்க: கரூர் சம்பவத்துக்கு யார் காரணம்? செந்தில் பாலாஜிவிடம் 6 மணி நேரம் துருவி துருவி விசாரணை..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share