×
 

#TNElectionResults2026: ஒற்றை ஆளாய் பிளாஸ்ட் செய்த விஜய்... 23 அமைச்சர்கள் ஷாக்... ஆடிப்போன அதிமுக, பாஜக...!

மொத்தம் 31 அமைச்சர்களில், சுமார் 22 முதல் 23 அமைச்சர்கள் வரை அவர்கள் போட்டியிடும் தொகுதிகளில் பின்னடைவை சந்தித்துள்ளனர்.

தமிழக சட்டமன்றத் தேர்தலின் முன்னிலை நிலவரங்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில், முதலமைச்சர் உட்பட பல்வேறு அமைச்சர்கள் பின்னடைவை சந்தித்திருப்பது திமுகவுக்கு பேரதிர்ச்சியாக மாறியுள்ளது. 

மொத்தம் 31 அமைச்சர்களில், சுமார் 22 முதல் 23 அமைச்சர்கள் வரை அவர்கள் போட்டியிடும் தொகுதிகளில் பின்னடைவை சந்தித்துள்ளனர். வெறும் 8 முதல் 9 அமைச்சர்கள் மட்டுமே முன்னிலையில் உள்ளனர்.

பின்னடைவை சந்தித்த முக்கிய அமைச்சர்களில் ஏ.வா. வேலு, டி.ஆர்.பி. ராஜா, கீதா ஜீவன், அன்பில் மகேஷ், கே.என். நேரு உள்ளிட்டோர் அடங்குகின்றனர். அதேபோன்று தா.மோ. அன்பரசன், மதிவேந்தன், பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் ஆகியோரும் பின்னடைவை சந்தித்துள்ளனர்.

இதையும் படிங்க: #TNElectionResults2026: பிகிலடிக்கும் விஜய்.. மெர்சல் காட்டும் தவெக... மக்கள் திமுக, அதிமுகவை ஓரங்கட்ட காரணம் இதுவா? 

முன்னிலையில் உள்ள அமைச்சர்களில் ஐ. பெரியசாமி, மூர்த்தி, மெய்யநாதன், ரகுபதி, பெரியகருப்பன், கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், சிவசங்கர், ராஜகண்ணப்பன், தங்கம் தென்னரசு ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் சேகர்பாபு, மா. சுப்பிரமணியன், துரைமுருகன், அன்பில் மகேஷ் உள்ளிட்டோரும் சில சுற்றுகளில் பின்னடைவை சந்தித்துள்ளனர்.

சென்னையில் உள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளிலும் தமிழக வெற்றி கழகம் முன்னிலையில் இருப்பதால், அங்கு போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் மற்றும் அமைச்சர்கள் பெரும்பாலும் பின்னடைவை எதிர்கொண்டுள்ளனர்.

மொத்த முன்னிலை நிலவரங்களைப் பொருத்தவரை:

தமிழக வெற்றி கழகம் சுமார் 100 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது
ஆதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சுமார் 80 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளன
திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சுமார் 53 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளன

பல தேர்தல்களில் தொடர்ந்து வெற்றி பெற்று வந்த அனுபவமிக்க அமைச்சர்களுக்கே இம்முறை பின்னடைவு ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்க மாற்றமாக பார்க்கப்படுகிறது. வாக்காளர்களை திரட்டுவதிலும் தேர்தல் வியூகங்களில் வல்லவர்களாக கருதப்பட்ட பலரும் இம்முறை சவாலை எதிர்கொண்டுள்ளனர்.

இந்த பின்னடைவிற்கு முக்கிய காரணமாக தமிழக வெற்றி கழகம் உருவாக்கியுள்ள புதிய அரசியல் தாக்கம் குறிப்பிடப்படுகிறது. முதல் முறையாக தேர்தல் களத்தில் இறங்கியிருந்தாலும், பல முக்கிய தலைவர்களுக்கு எதிராக கணிசமான முன்னிலை பெற்றுள்ளது.

குறிப்பாக, கட்சித் தலைவர் விஜய் போட்டியிடும் இரண்டு தொகுதிகளிலும் அவர் மிக அதிக வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார்.

இதையும் படிங்க: #TNElectionResults2026..! தேர்தல் ரேசில் முந்தும் தவெக..! குஷியில் விஜய் குடும்பம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share