×
 

தனி ஆள் இல்ல கடல் நான்! மதுரை மாநாட்டில் எடுத்த செல்பி வீடியோவை பகிர்ந்த விஜய்..!

தமிழக வெற்றிக் கழகத்தின் மதுரை மாநாட்டில் எடுத்த செல்பி வீடியோவை விஜய் பகிர்ந்துள்ளார்.

மதுரையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு, தமிழ்நாட்டு அரசியல் களத்தில் ஒரு முக்கியமான நிகழ்வாக அமைந்தது. மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில், பாரபத்தி என்ற பகுதியில் சுமார் 506 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக நடத்தப்பட்ட இந்த மாநாடு, நடிகர் விஜய் தலைமையிலான தவெகவின் வளர்ந்து வரும் அரசியல் செல்வாக்கை வெளிப்படுத்தியது. இந்த மாநாடு, 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கட்சியின் பலத்தை நிரூபிக்கும் வகையில், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து லட்சக்கணக்கான தொண்டர்களை ஒன்றுதிரட்டியது.

மாநாட்டிற்கான ஏற்பாடுகள் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தீவிரமாக நடைபெற்றன. 216 மீட்டர் நீளமும் 60 அடி அகலமும் கொண்ட மாபெரும் மேடை அமைக்கப்பட்டு, கட்சி நிர்வாகிகள் மற்றும் முன்னணி தலைவர்களுக்காக 200 இருக்கைகள் ஒதுக்கப்பட்டன. மாநாட்டு மைதானத்தில் ஆங்காங்கே பிரமாண்ட எல்.இ.டி. விளக்குகள், குடிநீர் வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், வாகன நிறுத்த வசதிகள் மற்றும் அவசர மருத்துவ சேவைகள் உள்ளிட்டவை முழுமையாக தயார் செய்யப்பட்டன.

https://x.com/i/status/1958817009413890328

குறிப்பாக, சுமார் 400 மருத்துவக் குழுவினர் மற்றும் ஆம்புலன்ஸ் வசதிகளுடன், ட்ரோன் மூலம் அவசர மருத்துவ உதவி வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாநாடு தொடங்கியவுடன் சிறப்பு பாடல் ஒலிக்க தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் எண்ட்ரி கொடுத்தார். விஜயை பார்த்ததும் தொண்டர்கள் ஆரவாரத்தில் துள்ளி குதித்தனர். மாநாட்டில் அமைக்கப்பட்டிருந்த ramp walk மேடையில் நடந்துச்சென்று தொண்டர்களை நோக்கி கையசைத்தவாறு நடந்தார்.

இதையும் படிங்க: விஜய் பேச்சில் திருப்தி இல்ல... தாடி பாலாஜியின் சர்ச்சை ஸ்டேட்டஸ்!

தொண்டர்கள் தூக்கி எரிந்த கட்சி துண்டுகளை கழுத்தில் போட்டுக் கொண்டும் தலையில் கட்டியும் விஜய் சென்றார். தொடர்ந்து செல்பி வீடியோ ஒன்றையும் எடுத்திருந்தார். இந்த நிலையில் மாநாட்டில் எடுத்த வீடியோவை விஜய் பகிர்ந்துள்ளார். உங்க விஜய் உங்க விஜய் உயிரென வர்றேன் நான்., உங்க விஜய் உங்க விஜய் எளியவன் குரல் நான்., உங்க விஜய் உங்க விஜய்.தனி ஆள் இல்ல கடல் நான் என்று குறிப்பிட்டார்.

இதையும் படிங்க: #MR.PM.. தாமரையில தண்ணீரே ஒட்டாது., தமிழக மக்கள் ஒட்டுவாங்களா? பிரதமரை பந்தாடிய விஜய்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share