சில சனியன் சகடையால் விஜய் வாழ்க்கையில் பிரச்சனை..!! பி.டி.செல்வகுமார் பரபரப்பு பேட்டி..!
விஜய் - சங்கீதா விவகாரம் குறித்து பி.டி செல்வகுமார் கருத்து தெரிவித்தார்.
நடிகரும் தமிழக வெற்றிக்கழக தலைவருமான விஜய் மற்றும் சங்கீதா ஆகியோர் 1999 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 அன்று திருமணம் செய்து கொண்டனர். இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த சங்கீதா, விஜயின் ரசிகையாக இருந்து பின்னர் அவரை மணந்தார். இவர்களுக்கு ஜேசன் சஞ்சய் என்ற மகனும், திவ்யா சாஷா என்ற மகளும் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளாகவே இவர்களது திருமண வாழ்க்கையில் விரிசல் ஏற்பட்டிருப்பதாக வதந்திகள் அவ்வப்போது எழுந்து வந்தன.
குறிப்பாக விஜய் அரசியல் களத்திற்கு முழுமையாகக் களமிறங்கிய பிறகு, சங்கீதா பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாதது, லண்டனில் தங்கியிருப்பதாகக் கூறப்படுவது போன்ற தகவல்கள் இந்த வதந்திகளுக்கு முக்கியமாக அமைந்தன. சமீப காலமாக இந்த விரிசல் மேலும் அதிகரித்திருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில்தான் சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த நிலையில், விஜய் - சங்கீதா விவாகரத்து விவகாரம் குறித்து திமுக நிர்வாகி பி.டி. செல்வகுமார் பதில் அளித்தார். அப்போது விஜயின் மனைவி வெளிநாட்டில் இருந்து வந்த பெண் என்றும் அவர் பயந்த சுபாவம் கொண்டவர் எனவும் தெரிவித்தார். இருவருக்கும் இடையிலான உறவு நல்ல முறையில் தான் இருந்தது என்றும் சில சனியன் சகடைகளால் விஜய் வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார். விஜய் தனது ரசிகர்களுக்கும், தாய் தந்தையர்க்கும், தயாரிப்பாளர்களுக்கும், உதவியாளர்களுக்கும் என யாருக்கும் உண்மையாக இல்லை என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஆளுங்கட்சி நிர்வாகியின் மிருகத்தனம்... தமிழ்நாட்டுக்கே தலைகுனிவு..! Tvk கண்டனம்..!!
இனிமேலாவது அனைத்தையும் புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். திருப்பாச்சி படத்தில் மட்டும் தங்கைக்கு ஆதரவாக இருந்தால் போதாது என்றும் படத்தில் மட்டும் பெண்களுக்கு ஆதரவாக பேசினால் போதாது என்றும் காதலுக்கு மரியாதை படத்தில் மட்டும் கொடுத்தால் போதாது எனவும் தெரிவித்தார். நிஜ வாழ்க்கையில் காதலுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்று கூறினார்.
இதையும் படிங்க: விஜய்க்கு அடுத்த அதிர்ச்சி... "தவெக நிர்வாகியால் என் உயிருக்கு ஆபத்து"... பெண் வெளியிட்ட பரபரப்பு வீடியோ...!!