ஓம் சக்தி…பராசக்தி… திமுக ஒரு தீய சக்தி..!! தஞ்சையில் விஜய் அனல் தெறிக்கும் பேச்சு..!!
தஞ்சையில் நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் விஜய் உரையாற்றினார்.
தஞ்சாவூரில் இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி மிகுந்த எதிர்பார்ப்புடன் நடைபெற்றது. தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கட்சியின் அடித்தளத்தை வலுப்படுத்தும் வகையில் தவெக தலைவர் விஜய் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சந்தித்து வருகிறார்.
இதன் தொடர்ச்சியாக தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள செங்கிப்பட்டி அருகே நடைபெற்ற தமிழகத்தில் கழகத்தின் நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் கட்சியின் தலைவர் விஜய் பச்சைத் துண்டுடன் கலந்து கொண்டார். தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், தமிழ்நாட்டின் உண்மையான பிரதிநிதியாக நாம் மட்டும் தான் இருக்கிறோம் என்பதற்காக தான், தமிழ்நாடு தான் விஜய், விஜய் தான் தமிழ்நாடு என்று கூறியதாக தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் டெல்லி டெல்லி என்று கூறுவதாகவும், ரெய்டு வந்தால் திமுக டெல்லிக்கு வெள்ளை குடை பிடிப்பதும் இன்று நடந்து கொள்கிறார்கள் என கூறி உள்ளார். ஓம் சக்தி., பராசக்தி., திமுக ஒரு தீய சக்தி என்ற இளைஞர்கள் கூறி வருவதாகவும், கிரிக்கெட்டில் கூட தமிழ்நாட்டை தொட்டு பார்க்க முடியாது எனவும் தெரிவித்தார். எனக்கும் மக்களுக்கும் இடையில் யாராலும் உள்நுழைய முடியாது என்று கூறினார். அனைத்து அணிகளையும் தமிழக வெற்றிக் கழகம் அடித்து நொறுக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: விஜய்க்கு ஒரு எம்எல்ஏ சீட் கூட தேறாது..! அடித்துக் கூறிய விசிக MP ரவிக்குமார்..!!
மற்றவர்களுக்கு வேண்டுமானால் இதை எலக்சன் என்றும் தனக்கும் தன்னை நேசிப்பவர்களுக்கும் இது எமோஷன் எனவும் தெரிவித்தார். இந்த விஜய்க்கு ஒரு வாய்ப்பு கொடுப்பீர்கள் தானே என்று தொண்டர்களை நோக்கி கேள்வி எழுப்பினார். விஜயை நம்புகிறீர்களா என்றும் ஒவ்வொரு வீட்டிலும் விசேஷ சத்தம் கேட்குமா என்றும் ஒவ்வொரு பூத்திலும் விசில் சத்தம் ஒலிக்குமா எனவும் விஜய் கேட்டார்.
இதையும் படிங்க: விஜய் அண்ணா WELCOME..!! திருச்சி TO தஞ்சை பயணம்... பூமழை பொழிந்து தொண்டர்கள் உற்சாகம்..!!