×
 

அரசியல் ஹீட்.. ஆன்மிக டச்..! மாஸ் என்ட்ரி... சீரடியில் சாய்பாபாவை தரிசித்த விஜய்..!!

சீரடி சாய்பாபா கோவிலில் விஜய் சாமி தரிசனம் செய்துள்ளார்.

தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் சமீபத்தில் ஆன்மீகப் பயணத்தை மேற்கொண்டுள்ளார். திருச்செந்தூர் முருகன் கோயிலில் விஸ்வரூப தரிசனம் செய்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, அவர் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள சீரடி சாய்பாபா கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்திருப்பது பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற்றது. முடிவுகள் மே 4ஆம் தேதி அறிவிக்கப்பட இருக்கும் நிலையில், தேர்தல் முடிவுக்கு சில நாட்களுக்கு முன்பாகவே விஜய் இந்த ஆன்மீகப் பயணத்தைத் தொடங்கியுள்ளார்.

ஏப்ரல் 28ஆம் தேதி அதிகாலையில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சென்ற விஜய், கடல் குளித்துவிட்டு விஸ்வரூப தரிசனம் செய்தார். அங்கு அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. சத்ரு சம்ஹாரம் சிறப்பு பூஜையும் நடைபெற்றது. பட்டு வேட்டி, சட்டை அணிந்து வந்த விஜய்க்கு வெற்றி வேல் மற்றும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. தரிசனத்துக்குப் பிறகு அவர் சென்னை திரும்பினார். 

இந்தத் தரிசனத்தைத் தொடர்ந்து, இன்று காலை சீரடி சாய்பாபா கோயிலுக்குச் செல்லும் திட்டத்தில் விஜய் இருந்தார். சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மகாராஷ்டிரா புறப்பட்ட அவர், காலை 10.30 மணியளவில் சாய்பாபா கோயிலில் தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. விஜய் இதற்கு முன்பும் பல முறை சீரடி சாய்பாபா கோயிலுக்கு சென்றுள்ளார். 2024ஆம் ஆண்டு தனது ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ பட வெளியீட்டுக்கு முன்பும், தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாட்டுக்கு முன்பும் அவர் அங்கு தரிசனம் செய்திருந்தார்.

இதையும் படிங்க: "அண்ணா எங்கள பாருங்க"..! ட்ராபிக்கில் விஜய் காரை பார்த்ததும் துள்ளி குதித்த பெண்கள்..!

இந்த முறை திருச்செந்தூர் முருகன் தரிசனத்துடன் இணைத்து சீரடி பயணத்தை மேற்கொண்டது, அவரது பக்தியின் தொடர்ச்சியாகவும், வரும் சவால்களுக்கு ஆசீர்வாதம் தேடும் நடவடிக்கையாகவும் பார்க்கப்படுகிறது. தமிழக அரசியலில் புதிய சக்தியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றி கழகத்தின் தலைவராக விஜய், மக்கள் மத்தியில் தனது பிம்பத்தை ஆன்மீகத்தின் மூலமும் வலுப்படுத்தும் விதமாக இந்தப் பயணங்கள் அமைந்துள்ளன.

இதையும் படிங்க: நெடுஞ்சாலை பராமரிப்பு பணிகளில் சுணக்கம்..! தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேல்முருகன் விமர்சனம்.!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share