அமித் ஷாவை சந்திக்கும் ஆதவ்! கொள்கை எதிரியுடன் கூட்டணியா? விஜய் முடிவால் திடீர் ட்விஸ்ட்!
தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய பிரமுகரான ஆதவ் அர்ஜுனா, திடீரென டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசியலில் தற்போது அதிகம் பேசப்படும் பெயர்களில் ஒன்று தமிழக வெற்றிக் கழக (த.வெ.க.) தலைவர் நடிகர் விஜய் மற்றும் அவரது நெருங்கிய நண்பர் ஆதவ் அர்ஜூனா. கட்சியின் விரிவாக்கம், 2026 சட்டமன்றத் தேர்தல் வியூகம் தீவிரமாக்கப்பட்டுள்ள நிலையில், கரூர் நெரிசல் துயர சம்பவத்துக்கு பின் ஆதவ் அர்ஜூனாவின் திடீர் டெல்லி பயணம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எந்தவித அறிவிப்பும் இன்றி தனி விமானத்தில் 5 பேருடன் டெல்லி புறப்பட்ட ஆதவ் அர்ஜூனா, தேசிய கட்சித் தலைவர்களை சந்திக்கலாம் என்று கூறப்படுகிறது. இது த.வெ.க.வின் கூட்டணி திசையை மாற்றி அமைக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த செப்டம்பர் 27-ம் தேதி கரூரில் விஜயின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில், 9 குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர். 51 பேர் காயமடைந்தனர். இதில் த.வெ.க. பொதுச் செயலாளர் ஆனந்த், இணை பொதுச் செயலாளர் நிர்மல் குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் மீது போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது. மாவட்ட செயலாளர் மதியழகன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: கரூர் சம்பவம் எதிரொலி! விஜயின் மக்கள் சந்திப்பு ஒத்திவைப்பு... தவெக அதிகாரப்பூர்வ அறிவிப்பு...!
சமூக வலைதளங்களில் வன்முறை தூண்டும் பதிவுக்கு த.வெ.க. தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா மீதும் வழக்கு பதிவாகியுள்ளது. அவர், "Gen Z போராட்டம்" என இலங்கை, நேபாள போராட்டங்களை குறிப்பிட்டு பதிவிட்டதால் சர்ச்சை எழுந்தது.
இந்த நிலையில் அவர் வீட்டிற்கு நேற்று வந்த கரூர் போலீசார் விஜயின் கேரவான் CCTV காட்சிகளை கேட்டுள்ளனர். இது நிலைமையின் தீவிரத்தை காட்டுகிறது. மேலும் கரூர் சம்பவத்தன்று ட்ரோன் காட்சிகளையும் ஆதவ் அர்ஜூனா கையண்டதால் அந்த காட்சிகளையும் போலீசார் கேட்டுள்ளனர். ட்ரோன் காட்சிகளில் கலவரம் எப்படி ஆரம்பித்தது? விஷமிகள் ஊடுருவினரா என்றும் ஆராய உள்ளனர்.
இதற்கிடையே விஜயை தொடர்பு கொண்டு பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கரூர் துயரம் குறித்து கேட்டதாகவும், அங்கு விஜய் மீது செருப்பு வீச முயன்றதால் பாதுகாப்பு பலப்படுத்த உத்தரவிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில் ஆதவ் அர்ஜூனாவின் டெல்லி பயணம் தவெக - பாஜக கூட்டணிக்கு அச்சாரமா என்றும் பேச்சு எழுந்துள்ளது.
ஆதவ் அர்ஜூனா, த.வெ.க.வின் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர். விஜய் கூட்டங்களின் ஒருங்கிணைப்பு, தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகம் செய்கிறார். கரூர் கூட்டத்தில் ட்ரோன் வீடியோ எடுத்தவர். அவரது அலுவலகத்தில் போலீஸ் விசாரணை நடத்தியதும், தனியான விமானத்தில் 5 பேருடன் டெல்லி புறப்பட்டார். அறிவிப்பின்றி அவசரமாக பயணித்ததால், அரசியல் வட்டாரத்தில் கேள்விகள் எழுந்துள்ளன.
"ஆதவ் யாரை சந்திக்கிறார்? கூட்டணி பேச்சுக்காவா? கரூர் வழக்கு தொடர்பாகவா?" என்று விவாதம் எழுந்துள்ளது. தகவல்களின்படி, 2026 தேர்தலுக்கு த.வெ.க. தேசிய கட்சித் தலைவர்களுடன் உறவுகளை வலுப்படுத்துகிறது. பாஜக, காங்கிரஸ் அல்லது தேசிய கட்சிகளுடன் கூட்டணி சாத்தியம் என்று கூறப்படுகிறது. கரூர் சம்பவம் த.வெ.க.வை பலவீனப்படுத்தியதால், தேசிய ஆதரவு தேவை என கட்சி தலைவர்கள் நினைக்கின்றனர்.
த.வெ.க.வின் கூட்டணி திசை, தமிழக அரசியலில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. விஜய், தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க.வை விமர்சித்து வருகிறார். ஆதவ் அர்ஜூனாவின் பயணம், கரூர் வழக்கு தொடர்பாகவும் பாஜக தலைவர்களை சந்திப்பதற்காகவும் என்று கூறப்படுகிறது. ஆனால் அதிகாரப்பூர்வ தகவல் இல்லை. அடுத்த நாட்களில் சந்திப்புகள் தெரியலாம். இந்த பயணம், த.வெ.க.வின் அடுத்த அரசியல் திசையை தெளிவுபடுத்தும்.
இதையும் படிங்க: இதெல்லாம் தலைவன் செய்யுற வேலையா... கோழைத்தனம்! விஜயை விமர்சித்த நடிகர் S.V. சேகர்...!